Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கும் தேர்தல்..எடியூரப்பா வீட்டிற்கே சென்ற அமித்ஷா..'பிரேக்பாஸ்ட் மீட்'-இல்நடந்த முக்கிய ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குமரகிருபா ரோட்டில் உள்ள எடியூரப்பாவின் காவேரி இல்லத்திற்கு அமித்ஷா சென்றார். அங்கு அவருடன் காலை சிற்றுண்டி சாப்பிட்ட அமித்ஷா கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் வரும் தேர்தலில் தொங்கு சட்டசபை எந்த நிலையிலும் வந்து விடக்கூடாது. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் ஆட்சி நடைபெறும் ஒரே தென்மாநிலம் கர்நாடகம் தான் என்பதால் இங்கு ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக பாஜக உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு தற்போது பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

முதல்வராக பாஜகவின் பசவராஜ் பொம்மை பதவி வகித்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டில் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. தற்போது கர்நாடக சட்டசபையின் காலம் முடிவுக்கு வர உள்ளது. வரும் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல்

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது இருந்தே மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், கர்நாடக தேர்தலையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்க உள்ளது.

ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில்

ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில்

பாஜகவின் ஆட்சி நடைபெறும் ஒரே தென்மாநிலம் கர்நாடகம் தான் என்பதால் இங்கு ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக பாஜக உள்ளது. அக்கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் அடிக்கடி கர்நாடக மாநிலத்திற்கு விசிட் அடித்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அடிக்கடி கர்நாடகம் வந்து தங்களது கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரதமர் மோடி கடந்த 2 மாதத்தில் 6 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார். நாளையும் கர்நாடாவிற்கு வருகை தருகிறார்.

கர்நாடகா வருகை

கர்நாடகா வருகை

இந்தநிலையில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, தேசிய பாதுகாப்பு குறித்த தென்மண்டல மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக மாநிலத்திற்கு நேற்று வருகை தந்து இருந்தார். இன்று (24.03.2023) காலை 9.30 மணியளவில் குமரகிருபா ரோட்டில் உள்ள எடியூரப்பாவின் காவேரி இல்லத்திற்கு அமித்ஷா வருகை தந்தார். அவரை எடியூரப்பா மற்றும் அவரது மகன் விஜயேந்திரா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

எடியூரப்பா வீட்டில் காலை சிற்றுண்டி

எடியூரப்பா வீட்டில் காலை சிற்றுண்டி

முதலில் எடியூரப்பா பூங்கொத்துடன் நின்று கொண்டிருக்க அவரது மகன் விஜேயந்திராவிடம் பூங்கொத்தை கொடுக்க அறிவுறுத்திய அமித்ஷா, அவரிடம் இருந்து முதலில் பூங்கொத்தை வாங்கினார். அதன்பிறகு எடியூரப்பா அளித்த பூங்கொத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் அமித்ஷாவிற்கு எடியூரப்பா வீட்டில் காலை சிற்றுண்டி (பிரேக் பாஸ்ட்) பரிமாறப்பட்டது. அமித்ஷாவுடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமித்ஷா ஆலோசனை

அமித்ஷா ஆலோசனை

அமித்ஷாவுக்கு விஜயேந்திராவே சிற்றுண்டியை பரிமாறினார். இந்த சிற்றுண்டி சந்திப்பில் கர்நாடக சட்டசபை தேர்தல் நிலை குறித்தும், வரும் நாட்களில் எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். மாநில தலைவர்கள் பிரசார உத்தியை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சில ஆலோசனைகளை அமித்ஷா அப்போது வழங்கினார்.

தொங்கு சட்டசபை வந்து விடக்கூடாது

தொங்கு சட்டசபை வந்து விடக்கூடாது

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜேயந்திரா, அமித்ஷாவுடனான சிற்றுண்டி சந்திப்பின் போது அரசியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். இது குறித்து விஜேயந்திரா கூறுகையில், "வரும் தேர்தலில் தொங்கு சட்டசபை எந்த நிலையிலும் வந்து விடக்கூடாது. தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது" என்றார்.

பதவியில் இருந்து விலகியது ஏன்

பதவியில் இருந்து விலகியது ஏன்

கர்நாடக பாஜகவை பொறுத்தவரை எடியூரப்பா தவிர்க்க முடியாத தலைவர் என்பதால் பாஜக மேல் மட்ட தலைமையும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனினும், எடியூரப்பாவின் மகன் விஜேயந்திரா இது குறித்து பேசுகையில், எடியூரப்பா ஒரு போதும் ஓரம் கட்டப்படவில்லை என்றும் முதல்வர் பதவியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து ஏற்கனவே எடியூரப்பா விளக்கம் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

எந்த தொகுதியில் போட்டி

எந்த தொகுதியில் போட்டி

மேலும், சித்தராமையா போட்டியிடும் வருனா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஜேயந்திரா, தனது தந்தையின் ஷிகாரிபுரா தொகுதியில் தான் கவனம் செலுத்துவதாகவும் எனினும் எந்த தொகுதியில் போட்டி என்பது குறித்து மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+