மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசை கண்டித்து 18ம் தேதி கர்நாடகாவில் பந்த்
பெங்களூர்: மேகதூதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து கன்னட அமைப்புகள் வரும் 18ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு விரும்புகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் வரும் 18ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில்,
முழுஅடைப்பு போராட்டத்திற்கு 600 கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆட்டோ ஓட்டுநர்கள், டிரக் டிரைவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.
போராட்டத்தால் வரும் 18ம் தேதி கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications