“டுவிஸ்ட்”.. சிவகுமார் கையில் காவிரி! சித்தராமையாவிடம் நிதித்துறை - கர்நாடக அமைச்சரவை இலாக்கா இதான்
பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்து உள்ள நிலையில், அங்கு அமைச்சர்களாக பதவியேற்ற 34 பேருக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றனர். இவர்களுடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

கர்நாடகா சட்டசபை சபாநாயகராக யுடி காதர் தேர்வு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து க கடந்த 27 ஆம் தேதி மேலும் 24 பேர் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அமைச்சர்களாக பதவியேற்றவர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.
இந்த நிலையில் தற்போது அமைச்சரவை இலாக்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி அதன்படி முதலமைச்சர் சித்தராமையாவே நிதித்துறையை வைத்து இருக்கிறார். துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் நீர்ப்பாசனத்துறை, பெங்களூர் நகர மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த துறையின்கீழ்தான் காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை பணி போன்றவையும் வருகிறது.
முன்னாள் துணை முதலமைச்சர் பரமேஸ்வராவுக்கு காவல் துறை கட்டுப்படுத்தும் உள்துறை வழங்கப்பட்டு உள்ளது. எச்.கே. பாட்டிலுக்கு சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை, சுற்றுலாத்துறை வழங்கப்பட்டு உள்ளது. கே.எச்.முனியப்பாவுக்கு உணவுத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

கே.ஜே.ஜார்ஜுக்கு மின்சாரத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ராமலிங்க ரெட்டிக்கு போக்குவரத்து துறை வழங்கப்பட்டு உள்ளது. எம்பி பாட்டிலுக்கு பெரிய, நடுத்தர தொழில்துறை, தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறை, மஹா தேவப்பாவுக்கு சமூக நலத்துறை, சதீஷ் ஜார்கிஹோலிக்கு பொதுப்பணித்துறை, கிருஷ்ணா பைரெகவுடாவுக்கு வருவாய்துறை வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரியங்க் கார்கேவுக்கு நகர்புற வளர்ச்சித்துறை, சிவானந்த் பாட்டிலுக்கு ஜவுளித்துறை, ஜமீர் அகமது கானுக்கு வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை, மது பங்காரப்பாவுக்கு தொடக்க மற்றும் மேல்நிலை கல்வித்துறை, ஷரனா பசப்பாவுக்கு சிறு குறு தொழில்துறை, ஈஸ்வர் கண்ட்ரேவுக்கு வனத்துறை, செலுவராயசாமிக்கு வேளாண் துறை, ரஹீம் கானுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹஜ் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், ஷரனபிரகாஷ் ருத்ரப்பாவுக்கு மருத்துவக் கல்வித்துறை, திம்மாபுர் ராமப்பாவுக்கு சுங்கத்துறை, வெங்கடேசுக்கு கால்நடை பராமரிப்புத்துறை, தங்கடாகி சிவராஜுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கன்னடா மற்றும் கலாச்சாரத்துறை, சுதாகருக்கு திட்டத்துறை, நாகேந்திராவுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
யதசந்த்ரா ராஜன்னாவுக்கு கூட்டுறவுத்துறை, சுரேஷாவுக்கு நகர்புற வளர்ச்சித்துறை, லட்சுமிக்கு பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை, மன்கல் வைத்யாவுக்கு மீன்வளம் மற்றும் துறைமுகத்துறை, எம்சி சுதாகருக்கு உயர் கல்வித்துறை, போசேராஜுவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் சிறிய நீர்பாசனம் ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications