ஜெயலலிதாவை போல மாறப்போகிறேன்... கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சு!!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா போல மாறப்போகிறேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கர்நாடகாவில் நடைபெற்ற 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்தது. ஷிகாரிபுரா, சிக்கோடி, பெல்லாரி ஊரகம் ஆகிய மூன்று தொகுதிகளில், ஷிகாரிபுரா தவிர்த்து இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. ஷிகாரிபுராவில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா (பாஜக) வெற்றி பெற்றார்.

எடியூரப்பா மகன் வெற்றி
வெற்றி தகவல் வெளியானதும் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் சித்தராமையா. அப்போது அவர் பேசுகையில், ஷிகாரிபுரா தொகுதியில், 6 ஆயிரத்து 400 வாக்குகள் வித்தியாசத்தில்தான் எடியூரப்பா மகன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தேர்தலுக்கு முன்பு எடியூரப்பா அளித்த பேட்டிகளில் பெரும் வாக்குவித்தியாசத்தில் தனது மகன் வெற்றிவாகை சூடுவார் என்று கூறியிருந்தார்.

எடியூரப்பா செல்வாக்கு சரிந்துவிட்டது
எடியூரப்பாவின் செல்வாக்கு சரிந்துவிட்டதையே தேர்தல் முடிவு காண்பிக்கிறது. காங்கிரஸ் வெற்றி பெற்ற இரு தொகுதிகளிலும் வாக்குவித்தியாசம் 30 ஆயிரத்துக்கு மேல் உள்ளது என்றார்.

பேசுவதை குறைக்கபோகிறேன்
இதனிடையே பேட்டி ஆரம்பிக்கும் முன்பு கேஷுவலாக, பத்திரிகையாளர்களிடம் பேசிய சித்தராமையா, "இனிமேல் நான் பத்திரிகையாளர்களிடம் பேசுவதை குறைத்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். பணிகளில் மட்டுமே நேரத்தை செலவிட உள்ளேன்" என்றார்.

டிவிகளுக்கு டிஆர்பி வேண்டுமே...
இதைக்கேட்ட, கன்னட பத்திரிகையாளர் ஒருவர், "ஏற்கனவே டிவிக்களில் டிஆர்பி குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள், நீங்களும் பேசவில்லையென்றால் அவர்கள் நிலைமை என்ன ஆவது?" என்றார்.

ஜெயலலிதா பேட்டி கொடுக்கிறாரா?
அதற்கு சித்தராமையா, "தமிழக ஜெயலலிதா மீடியாக்காரர்களிடம் பேசுவதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிப்பது மிகவும் அரிது. அதைப்போலத்தான் நானும் இருக்கப்போகிறேன்" என்றார்.

கர்நாடகாவில் நிலைமை அப்படி இல்லை
"குஜராத் மாடல் அரசு நடத்தப்போகிறோம் என்று பல முதல்வர்கள் சொல்லும்போது, நீங்கள் மட்டும் ஜெயலலிதா மாடலுக்கு செல்கிறீர்களே" என்று ஆங்கில பத்திரிகை நிருபர் ஒருவர் சித்தராமையாவிடம் கேட்டார். "தமிழக நிலவரம் வேறு சார்.. ஆனால் இங்கெல்லாம் அப்படி கிடையாதே" என்று மற்றொரு பத்திரிகையாளர் சொல்ல உரையாடலுக்கு திரை விழுந்தது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications