கோர்ட் திறக்கும் முன்பே கர்நாடகா அப்பீல் செய்ய காரணம் என்ன?, ஆர்.கே.நகர் அம்பேலா?
டெல்லி: ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக அரசு அவசரமாக அப்பீல் செய்துள்ளதா, அல்லது இதுவே தாமதமா என்ற விவாதங்கள் ஒருபக்கம் இருக்க, கர்நாடகா ஏன் இன்று இம்மனுவை தாக்கல் செய்தது என்பதுகுறித்து அம்மாநில சட்டத்துறை வட்டாரங்கள் சில தகவல்களை கூறின.
கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்ததை எதித்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு, தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தன.

அமைச்சரவை முடிவு
இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை கடந்த ஜூன் 1ம்தேதி, மேல்முறையீட்டு முடிவை எடுத்தது. இதையடுத்து அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சாரியா மற்றும் அவரது உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் மேல்முறையீடு மனு தாயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

23 நாட்கள்
மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்த 23 நாட்களுக்கு பிறகு தற்போது சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹைகோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு தடை கேட்டும் அம்மனுவில் கோரப்பட்டு்ள்ளது. அவ்வாறு தடை கொடுக்கப்பட்டால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழக்க வேண்டிவரும். ஆர்.கே.நகர் தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஏனெனில் ஹைகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்தால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின்படி ஜெயலலிதா குற்றவாளியாகவே கருதப்படுவார்.

ஜூலை 1ல் திறப்பு
ஆர்.கே.நகரில் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் அதை மனதில் வைத்து அவசரமாக கர்நாடகா இந்த வழக்கை தாக்கல் செய்ததாக அதிமுக தரப்பில் சிலருக்கு சந்தேகம் எழலாம். ஆனால், அப்படியில்லை என்கிறது கள நிலவரம். சுப்ரீம்கோர்டுக்கு தற்போது கோடை விடுமுறை காலமாகும். அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம், ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

தேர்தல் முடிந்துவிடுமே..
ஜெயலலிதா மீதான மேல்முறையீட்டு மனு ஜூலை 1ம் தேதிக்கு பிறகுதான் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, என்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது அறிவிக்கப்படும். எனவே அதற்குள் ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்துவிடும். மேலும், இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள கர்நாடகம் கோரிக்கைவிடுக்கவில்லை. எனவே, ஜூலை மாதம் எப்போது வழக்கு விசாரணைக்கு வரும் என்பதில் உறுதித்தன்மை இல்லை.

அவசர வழக்கில்லை
இதுகுறித்து ஆச்சாரியா ஏற்கனவே அளித்த பேட்டியில், "ஜெயலலிதாவை விடுதலை செய்த உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீடு செய்யப்படுவதால், இதை அவசர வழக்காக கருதி சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்ய முடியாது. எனவே பொறுமையாக மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வருகிறோம்" என்றார். ஜூலை கோர்ட் திறந்த பிறகு அப்பீல் செய்வதை விட இப்போது அப்பீல் செய்தால்தான் கோர்ட் திறந்ததும், முதலில் இவ்வழக்கு பரிசீலிக்கப்படும் என்பதே, அரசு தரப்பு முடிவுக்கு காரணமாகும்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications