விரைந்து தீர்ப்பு வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது
பெங்களூரு: அறக்கட்டளை தொடர்பான வழக்கு ஒன்றில் விரைவாக தீர்ப்பு வழங்க ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடக நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதியாக உள்ள சரவணப்பா சஜ்ஜன், ஹீல்சூரில் உள்ள ஸ்ரீகுருப சவேஷ்வரா கல்வி அறக்கட்டளை தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்து வந்தார்.
இந்த அறக்கட்டளையின் தலைவராக இருந்த காசிநாத் என்பவர், பதவி காலம் முடிவதற்குள் தன்னை பதவியில் இருந்து நீக்கியதால், தனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் அளித்திருந்தார். ஆனால் அறக்கட்டளைக்கு ரூ.30 லட்சம் செலுத்துமாறு அறக்கட்டளை நிர்வாகிகள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 2000-ம் ஆண்டு இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார் காசிநாத்.

14 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கப் படாமல் இருந்தது. விரைந்து தீர்ப்பை வழங்க வேண்டுமென்றால் ரூ. 5 லட்சம் தர வேண்டும் என காசிநாத்திடன் நீதிபதி சஜ்ஜன் பேரம் பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காசிநாத், இது தொடர்பாக உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதிகாரிகள் அளித்த திட்டப்படி, கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு ரூ.5 லட்சம் பணத்துடன் பீதர் பசவண்ணா சிலை அருகே காசிநாத் காத்திருந்தார். அப்போது பணத்தை வாங்கிய நீதிபதி சரவணப்பாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட நீதிபதி சரவணப்பா போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதை ஹைகோர்ட் பதிவாளர் பி.ஏ.பாட்டீல் உறுதி செய்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார்.
லஞ்சம் பெறும்போது உயர்நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா ஒத்துக்கொண்டுள்ளார். அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications