ஜம்முவில் ட்விஸ்ட்! இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள 2 தொகுதிகளில் பாஜகவிற்கு கிடைத்த பலத்த அடி
ஸ்ரீநகர்: ஜம்மு பிராந்தியத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள 2 தொகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளில் பாஜக பின்னடவை சந்தித்தாலும் ஜம்முவின் பிற பிராந்தியங்களிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஜம்ம காஷ்மீரை பொறுத்தவரை சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இதனால், நாடு முழுவதும் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் + தேசிய மாநாடு கட்சிகள் கூட்டணி அமைத்தும், பாஜக, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் போட்டியிட்டன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது எனவும், இந்தியா கூட்டணி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்று கூறின. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இந்தியா கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தற்போது வரை 81 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய மாநாட்டுக் கட்சி 38 இடங்களில் வென்றுள்ளது. 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 26 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சி 3 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா தோல்வியைத் தழுவினார். இந்தியா கூட்டணி கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க உள்ளது. பாஜகவிற்கு காஷ்மீரில் பலத்த அடி கிடைத்தது.
கடந்த 2014 தேர்தலில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 22.98 சதவிகித வாக்குகள் பெற்றது. தற்போதைய தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி பாஜக 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை பாஜக பெறவில்லை இருந்தாலும், கடந்த தேர்தலைக் காட்டிலும் அக்கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி முகத்தில் இருக்கிறது. பாஜக வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான தொகுதிகள் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள தொகுதிகள்தான்.
ஆனால், ஜம்மு பிராந்தியத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இரண்டு தொகுதிகளில் பாஜகவிற்கு படு தோல்வி கிடைத்து இருப்பது அக்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பானி மற்றும் ரம்பன் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பாஜகவிற்கு தோல்வியே கிடைத்து இருக்கிறது. ராமேஷ்வர் சிங் என்ற சுயேட்சை வேட்பாளர் பாஜகவின் ஜெவான் லால் என்பவரையும் பானி தொகுதியில் 18,672 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
ராம்பன் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சியின் அர்ஜூன் சிங் ராஜூ, சுராஜ் சிங் பரிஹாரை தோற்கடித்துள்ளார். இவர் பாஜக சீட் தராததால் சுயேட்சையாக இந்த தொகுதியில் போட்டியிட்டார். பாஜகவின் ராகேஷ் சிஙதாகூர் 17 ஆயிரம் வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். கடந்த 2014 ம் ஆண்டு தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்











Click it and Unblock the Notifications