மும்பை: தீவிரவாத தாக்குதலில் பலியான அதிகாரியின் மனைவி கவிதா மரணம்
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதலில் பலியான உயர் போலீஸ் அதிகாரியின் மனைவி கவிதா கர்க்கரே உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் இன்று உயிரிழந்தார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் மும்பையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் உள்பட 164 பேர் பலியானார்கள். தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போராட்டத்தில் தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்காரேயும் உயிரிழந்தார்.
மும்பை காமா மருத்துவமனை அருகே தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் கூடுதல் கமிஷனர் அசோக் காம்தே, எஸ்.எஸ்.பி. விஜய் சலாஸ்கர் ஆகியோருடன் ஹேமந்த் கர்காரேயும் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்தபின்னர், போலீஸ் அதிகாரிகளுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் சிறந்த பயிற்சியும் போதிய வசதிகளும் செய்துகொடுக்க வேண்டும் என்று கர்காரேயின் மனைவி கவிதா கர்காரே வலியுறுத்தினார்.
கணவர் இறந்தபின் கடும் மன அழுத்தத்தில் இருந்த கவிதா கர்காரேவின் உடல்நிலை கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து மும்பை இந்துஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இன்று மதியம் கோமா நிலையிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications