கெஜ்ரிவால் ஆளும் டெல்லியில் கஜகஸ்தான் நாட்டு பெண் 3 பேரால் பலாத்காரம்
டெல்லி: டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கஜகஸ்தானைச் சேர்ந்த 35 வயது பெண் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கஜகஸ்தானைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு மத்திய டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தனக்கு தெரிந்த 3 ஆண்களை பார்க்க சென்றார். ஆனால் அவர்களோ ஹோட்டல் அறையில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதையடுத்து இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர்.
இது குறித்து துணை கமிஷனர் பரமாதித்யா கூறுகையில்,
கஜகஸ்தான் நாட்டுப் பெண் தனக்கு பழக்கமானவர்களை சந்திக்க சென்ற இடத்தில் அவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியா வரும்போது எல்லாம் ஹோட்டல்களில் தங்குவது உண்டு. அவரை பலாத்காரம் செய்த 3 பேரையும் அவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக தெரியும். கைது செய்யப்பட்டவர்களின் பெயரை தெரிவித்தால் அந்த பெண் யார் என்பதும் தெரிய வரலாம். அதனால் கைதானவர்களின் பெயர்களை தெரிவிக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications