என்ன கொடுமை பாருங்க.. கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவில் வெடிகுண்டு.. வாய் வெடித்து துடித்த பரிதாபம்
கர்ப்பிணி பசுக்கு வெடிகுண்டு வைத்த மர்மநபர்களை தேடி வருகிறார்கள்
சிம்லா: கேரள யானை மாதிரியே உணவு பொருளில் வெடிகுண்டு வைத்துள்ளனர்.. அந்த யானையை போலவே உணவை சாப்பிட வந்தபோது, வெடி வெடித்து ஒரு பசுவின் வாய் படுகாயமடைந்துள்ளது.. இந்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.
கேரளாவில் யானை வெடி வைத்து கொன்ற விவகாரமே இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் உள்ளது.. குற்றவாளிகளை இன்னமும் தேடி வருகிறார்கள்..
ஆரம்பத்தில் யானை மலப்புரம் மாவட்டத்தில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது, பிறகு பாலக்காடு மாவட்டம் என்று அம்மாநில அரசு சொன்னது.. முதலில் அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து நிரப்பி வைத்ததாக சொன்னார்கள், விசாரணைக்கு பிறகு தேங்காய்தான் வெடித்தது என்கிறார்கள்.

பசு
இவைகளை தாண்டி மத ரீதியான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி யானை கொல்லப்பட்ட வழக்கில் தினந்தோறும் புது புது தகவல்களும் வெளியாகி வரும் நிலையில், பசுவுக்கும் இதே போல ஒரு நிலைமை நேர்ந்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கடந்த மே 26-ம் தேதி ஒரு கர்ப்பிணி பசு, கோதுமை மாவை பசிக்காக சாப்பிட்டுள்ளது.. அதை சாப்பிட்டதுமே பசுவின் வாய் வெடித்து ரத்தம் கொட்ட தொடங்கி உள்ளது.

கோதுமை மாவு
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், கோதுமை மாவு பந்துக்குள் வெடிகுண்டு வெடித்துள்ளதும்,அதை சாப்பிட வந்தபோதுதான் பசுவின் வாய் சிதைந்தாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.

வெடிகுண்டு
இதை பார்த்து கொதித்து போன மக்கள், மாபாதக செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.. கோதுமை மாவில் யார் வெடிகுண்டை வைத்தது என தெரியவில்லை.. பக்கத்து வீட்டுக்காரர்தான் இந்த காரியத்தை செய்திருக்க கூடும் என்றும், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவினை அவர்தான் பசுவுக்கு தந்திருப்பார் என்றும் பசுவின் உரிமையாளர் குற்றஞ்சாட்டுகிறார்.

கொடுமை
எனினும் உண்மைதன்மையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.. தங்கள் விவசாய பயிர்களை பசுக்கள் நாசம் செய்வதாலேயே இவ்வாறு கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யானையை அடுத்து பசுவுக்கும் வெடிகுண்டு வைத்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications