15 லட்சம் பெங்காலிகளை நம்பி கேரள தேர்தல் களத்தில் குதிக்கும் மமதா பானர்ஜி!
கொச்சி: கேரளாவில் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்து வரும் 15 லட்சம் பெங்காலிகளை நமபி, மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் அங்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளிலும் மமதா கட்சி போட்டியிடுகிறது.
முதல் கட்டமாக 70 தொகுதிகளின் வேட்பாளர்களை நேற்று கட்சியின் கேரள மாநிலத் தலைவர் மனோஜ் சங்கரநல்லூர் அறிவித்தார்.
மேலும் மமதா பானர்ஜி தேர்தல் பிரசாரத்திற்காக வரவுள்ளதாகவும் மனோஜ் சங்கரநல்லூர் கூறினார்.

காங் -கம்யூ கூட்டணியை அம்பலப்படுத்த
இதுகுறித்து மனோஜ் சங்கரநல்லூர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் கேரளாவில் தனித்துப் போட்டியிடுகின்றன. ஆனால் மேற்கு வங்கத்தில் இரண்டும் கை கோர்த்துள்ளன.

புனிதமற்ற
இந்தக் கூட்டணி புனிதமற்றது. இதை கேரள மக்களிடம் அம்பலப்படுத்தவே எங்களது கட்சி இங்கு போட்டியிடுகிறது. கேரளாவிலும் கூட இவர்கள் ரகசிய உறவு வைத்துள்ளனர்.

3 ஊர்களில் பிரசாரம்
மமதா பானர்ஜி ஏப்ரல் மாதம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பார்.

2 லட்சம் தொண்டர்கள்
கேரளாவில் திரினமூல் காங்கிரஸுக்கு 2 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். மேலும், 15 லட்சம் பெங்காலிகளும் இங்கு பல்வேறு வேலையில் உள்ளனர். அவர்களும் ஆதரிப்பார்கள்.

ஜெயிக்க முடியாது
எங்களால் இங்கு ஜெயிக்க முடியாது என்றாலும் கூட சக்திவாய்ந்த அரசியல் சக்தியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவெடுப்போம் என்றார் அவர்.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications