Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொல்கத்தா போலீசாருக்கு "முதுகெலும்பு" பரிசு! மருத்துவர் கொலை வழக்கில்.. அதிர வைக்கும் தகவல்!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தச் சம்பவத்தில் கொல்கத்தா போலீசாரின் செயல்பாடுகளைக் கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ள மருத்துவர்கள், கொல்கத்தா போலீசாருக்கு முதுகெலும்பு மாதிரியைப் பரிசாகக் கொடுத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கைதாகியுள்ளார்.

kolkata kolkata doctor case west bengal

இருப்பினும், இதில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதற்கிடையே கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரத்தில் ஜூனியர் டாக்டர்கள் இப்போது வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது

மருத்துவர் கொலை: சந்தீப் கோஷ் கல்லூரி முதல்வராக இருந்த போது ​​ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. ஊழல் முறைகேடுகளில் சந்தீப் கோஷ் நேற்று தான் கைது செய்யப்பட்டு இருந்தார். இப்படி சிபிஐ அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வந்தாலும் கூட போராட்டத்தைக் கைவிட மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து மறுத்தே வருகின்றனர்.

மேற்கு வங்க சட்டசபையில் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதேநாளில் போராட்டங்களும் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிர வைக்கும் தகவல்: சந்தீப் கோஷ் கைது என்பது வெறும் தொடக்கம் தான் என்றும் இதில் வேறு பலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி பகீர் கிளப்பியுள்ளனர். மேலும், 1,100 பக்கங்கள் கொண்ட பல ஆவணங்களை சிபிஐயிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். அவை அனைத்துமே ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட அரசு ஆவணங்கள் என்றும் மருத்துவர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.

பணமோசடி, நெபோடிசம், சட்ட விரோத பணப் பரிமாற்றம் எனப் பல புகார்களை மருத்துவர்கள் கூட்டமைப்பினர் அடுக்குகிறார்கள். இது தொடர்பாக மொத்தம் 12 பேரின் பெயரை சிபிஐ அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.

விமர்சனம்: பயிற்சி மருத்துவர்கள் கொல்கத்தாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் பதவி விலகக் கோரி பேரணியும் நடத்தினர். மருத்துவர்கள் பேரணியாகச் செல்ல விடாமல் போலீசார் தடுத்த நிலையில், சுமார் 23 மணி நேரம் மருத்துவர்கள் அங்கேயே இருந்தனர். சாதாரண போராட்டத்திற்கு போலீசார் இந்தளவுக்கு அஞ்சுவது ஏன் என்பது தெரியவில்லை என்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த விரும்பும் தங்களைத் தடுக்க 8 அடிக்குத் தடுப்புகளை போலீசார் ஏற்படுத்தியுள்ளதாகவும் மருத்துவ மாணவர்கள் விமர்சித்துள்ளனர்.

kolkata kolkata doctor case west bengal

முதுகெலும்பு: இப்போது, ​​அவர்கள் மீண்டும் லால்பஜாருக்கு பேரணியாகச் சென்றுள்ளனர். இதில் மருத்துவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் மாணவர்களும் அதிகளவில் கலந்து கொண்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் கொல்கத்தா போலீசாருக்கு முதுகு எலும்பு மாதிரியையும் பரிசாக எடுத்துச் சென்றனர். போலீசார் தங்கள் கடைமையை முறையாகச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முதுகெலும்பு மற்றும் சிவப்பு ரோஜாக்களை பேரணியின் போது எடுத்துச் சென்றனர்.

பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தில் கொல்கத்தா போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாகக் குற்றம் நடந்த இடத்தில் கூட குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் மாணவர்கள் கூறி வருகின்றனர். மாணவர்கள் மட்டுமன்றி சிபிஐ தரப்பும் கூட உச்ச நீதிமன்றத்தில் இதே கருத்தைக் கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+