பெண் மருத்துவர் கொலை நடந்தபோது.. கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனை முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் கைது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தான் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆக. 9ம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த விவகாரத்தில் இதுவரை சஞ்சய் ராய் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இதில் வேறு சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் சந்தீப் கோஷ். அவருக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. பெண் மருத்துவர் கொல்லப்பட்ட போது அதைத் தற்கொலை எனப் பெற்றோரிடம் முதலில் சொன்னது, குற்றம் நடந்த செமினார் ஹால் அருகே புதுப்பிப்பு பணிகள் அவசர அவசரமாக நடந்தது என இவரைச் சுற்றிப் பல சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து கடந்த வாரம் அவரிடம் உண்மையைக் கண்டறியும் சோதனையையும் சிபிஐ அதிகாரிகள் நடத்தி இருந்தனர்.
இது மட்டுமின்றி ஆர்ஜி கார் மருத்துவமனையில் பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும் அதில் சந்தீப் கோஷுக்கு நேரடியாகத் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சந்தீப் கோஷுக்கு சொந்தமான 15 இடங்களில் கடந்த வாரம் ரெய்டும் நடத்தினர்.
இந்தச் சூழலில் இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை இப்போது கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சிபிஐ அதிகாரிகள் தான் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications