சண்டிகர் மேயரானார் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார்! நீதிமன்ற தீர்ப்பையடுத்து.. பதவியேற்றுக்கொண்டார்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருந்ததை உச்சநீதிமன்றம் கண்டிருந்த நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. இந்நிலையில் இன்று ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் மேயராக பதவியேற்றுக்கொண்டார்.

பஞ்சாப் மாநிலத்திற்கும், ஹரியானா மாநிலத்திற்கும் சண்டிகர் தலைநகரமாக செயல்பட்டு வருகிறது. சண்டிகர் நகராட்சியில் மொத்தம் 35 இடங்கள் இருக்கின்றன. இதில் பாஜக சார்பில் 14 கவுன்சிலர்களும், அகாலிதளம் சார்பில் 1 கவுன்சிலர் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் பாஜக பக்கம் இருக்கின்றனர். மற்றொருபுறம் 13 கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி சார்பிலும், 7 கவுன்சிலர்கள் காங்கிரஸ் சார்பிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

 Kuldeep Kumar sworn in as Chandigarh Mayor after Supreme Court declares Aam Aadmi Party won

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி எனும் பெயரில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட உள்ள நிலையில், இதற்கு முன்னோட்டமாக சண்டிகர் மேயர் தேர்தலில் இணைந்து போட்டியிட காங்கிரஸும், ஆம் ஆத்மியும் முன் வந்தன. இயல்பாகவே இந்த கூட்டணிக்குதான் அதிக வாக்குகள் இருக்கிறது என்பதால் இவர்கள் தரப்பிலிருந்தே மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்பட்டது.

மேயர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் நிறுத்தப்பட்டார். கடந்த 30ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் தொடங்கியது. அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டன. ஆம் ஆத்மி+காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். எனவே இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமார்தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மனோஜ் சோங்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது ஆம் ஆத்மிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது பாஜக வேட்பாளர் 16 வாக்குகளை பெற்றிருந்தார். அதேபோல காங்கிரஸ்+ஆம் ஆத்மி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமார் 20 வாக்குகள் கிடைத்தன. ஆனால் அதில், 8 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. எனவே பாஜகவின் மனோஸ் சோங்கர் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

தேர்தல் அதிகாரி பாஜகவுக்கு சாதகமாக நடந்துக்கொண்டதாக கூறி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், தேர்தல் அதிகாரி வாக்கு சீட்டில் எதையோ எழுதுவது தெரிந்தது. இதனையடுத்து பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கு அவசர வழக்காக கடந்த 31ம் தேதி விசாரிக்கப்பட்டது, விசாரணையின் இறுதியில், மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

எனவே உச்சநீதிமன்ற படியை காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஏறின. கடந்த 20ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தேர்தல் விதி மீறலில் தேர்தல் அதிகாரி ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது என்றும், எனவே காங்கிரஸ்+ஆம் ஆத்மி கூட்டணியின் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று, குல்தீப் குமார் முறைப்படி மேயர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+