காவிரி ஆணையத்தை கர்நாடகா எதிர்க்கும்.. மோடியை சந்தித்த பிறகு குமாரசாமி பேட்டி
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என கர்நாடக மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லி சென்றிருந்தார். இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். மாலையில் பிரதமர் மோடியை சந்தித்து சில மனுக்களை அளித்தார்.

பிரதமரை சந்தித்த பிறகு குமாரசாமி அளித்த பேட்டியில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் சில அம்சங்கள் கர்நாடகாவுக்கு எதிராக உள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதுபற்றி விவாதித்துதான் முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால் காவிரி ஆணையம் அவசரமாக அமைக்கப்பட்டது தவறு. இதை ஏற்க மாட்டோம்.
10 நாட்களுக்கு ஒருமுறை காவிரி அணைக்கட்டு நீர் இருப்பை காவிரி மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்யும் என்பது அறிவியல் பூர்வம் இல்லாதது. காவிரி பாசன பகுதிகளில் கர்நாடக விவசாயிகள் என்ன மாதிரி பயிர்களை பயிரிட வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் தீர்மானிக்கும் என்பது, விவசாயிகளுக்கு எதிரானது இதை எதிர்க்கிறோம் என்றார் குமாரசாமி.
காவிரி பிரச்சனையில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்ய திட்டம் உள்ளதா என்று நிருபர்கள் கேள்வி கேட்டபோது, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறேன் என குமாரசாமி பதில் அளித்தார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications