காங். சமூக வலைத்தள பிரிவு தலைவரானார் ரம்யா.. இனி எதிரிகளுக்கு "கும்மாங்குத்து"தான்!!
பெங்களூரு: சமூக வலைத்தளத்தில் பாஜகவினர் செய்து வரும் பிரசாரங்களுக்குப் பதிலடி தரும் வகையில் தனது சமூக வலைத்தள பிரிவுக்கு கூடுதல் கவனம் கொடுக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி. சமூக வலைத்தள பிரிவு தலைவராக நடிகை ரம்யாவை அது நியமித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ரம்யா முன்னாள் எம்.பி. ஆவார். தமிழில் குத்து, கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது சமூக சேவைப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர் ரம்யா.
முன்னாள் எம்.பியாக இருந்தாலும் கூட தொடர்ந்து கட்சிப் பணிகளில்தொய்வின்றி ஈடுபட்டு வருபவர். அவருக்கு சமூக வலைத்தளத்தில் உள்ள பிரபலத்தை உணர்ந்து அவருக்கு இந்தப் புதிய பொறுப்பைக் கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

ஹூடாவிடமிருந்து
ஹரியானா மாநிலம் ரோதக் எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடாவிடம் இருந்து வந்தது சமூக வலைத்தள காங்கிரஸ் தலைவர் பதவி. அதைத்தான் தற்போது ரம்யாவிடம் கொடுத்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.

கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் அங்கு பாஜக வலுவான பிரசாரங்களை சமூக வலைத்தளம் மூலம் செய்து வருகிறது. இதை சமாளிக்கவே ரம்யாவை கொண்டு வந்துள்ளது காங்கிரஸ் என்கிறார்கள்.

குத்துக்குப் பதில் குத்து
பாஜகவினரின் பதிவுகளுக்குப் பதிலடியாக ரம்யாவின் செயல்பாடுகள் அமையும் என்ற நம்பிக்கையும் காங்கிரஸிடம் உள்ளதாம். அவரது நியமனம் கர்நாடக காங்கிரஸுக்கு சமூக வலைத்தளத்தில் செல்வாக்கு அதிகரிக்க உதவும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உள்ளனர்.

தமிழகத் தேர்தல் வரும்போது!
இதேபோல தமிழக சட்டசபைத் தேர்தல் சமயத்தில் நக்மா அல்லது குஷ்புவை சமூக வலைத்தள தலைவியாக நியமிக்குமா காங்கிரஸ் மேலிடம் என்ற கேள்வி இப்போதே தமிழக காங்கிரஸார் மத்தியில் எழுந்துள்ளது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications