'தலித்துகளும் சங்கராச்சாரிகளாக வேண்டும்'... அதிரடி காட்டும் லாலு பிரசாத்!
அனைத்துச் சாதியினரும் சங்கராச்சாரிகளாக, இந்து மத தலைமைப் பதவிகளுக்கு வரவேண்டும் என்று முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்.
ராஜ்கிர்: அனைத்து சாதியினரும், சங்கராச்சாரியார் போல, இந்து மதத்தின் தலைமைப் பீட பதவிகளுக்கு வர வேண்டும் என்று, லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் பகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினருக்கு தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ''பாஜக.,வினர் தேசபக்தி என்ற பெயரில் மிகத் தவறான அரசியல் செய்து வருகின்றனர். அவர்களை எதிர்க்க யாரும் இல்லை என்ற கற்பனையில், ஆதிக்க மனப்பான்மையோடு, பாஜக தலைவர்கள் நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும், திட்டங்களையும் வெளியிடுகின்றனர். இதனை நான் எதிர்க்க திடமாக முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.
மேலும்,''பாஜக.,வுக்கு எதிராக மிகப்பெரிய அரசியல் கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளேன். 2019 லோக்சபா தேர்தலில், பாஜக தோல்வியை சந்திப்பது உறுதி. அதற்கான ஏற்பாடுகளில், நான் தீவிரமாக ஈடுபடுவேன். எப்போதும் இந்துத்துவா பற்றியும், அதன் அடிப்படைகளை பாதுகாப்பது பற்றியும் பாஜக கவலைப்படுகிறது. அதனை நாம் முறியடிக்க வேண்டும்.
இந்து மதத்தில், ஆதிக்க சாதியினர்( மட்டுமே சங்கராச்சாரியார் போன்ற மதத் தலைவர் பதவிகளை வகித்து வருகின்றனர். இதனை எதிர்த்து, தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்களும் சங்கராச்சாரியார் உள்ளிட்ட இந்து மதத் தலைமை பதவிகளுக்கு வர நாம் பாடுபட வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. அத்துடன், இந்திய எல்லையில் பெரும் பதற்றம் நிலவும் சூழலில், பாஜக அரசு அதைப் பற்றி கவலைப்படவில்லை. இதுவரையிலும் முழு நேர பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படவில்லை என்பது மிக, கவலை தருகிறது,'' என லாலு பிரசாத் குறிப்பிட்டார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications