“காஸாவிற்காக பழிவாங்குவோம், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்” – மும்பைக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
மும்பை: மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தியினைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடிக்கி விடப்பட்டுள்ளன.
மும்பை போலீசாருக்கு வந்த ஒரு கடிதத்தில் "காஸா போராட்டத்திற்கு பழிவாங்குவோம்" என்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு பக்கத்தை உடைய அக்கடிதமானது மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா பெயருக்கு, மும்பை காவல்துறை கண்காணிப்பு மையத்திற்கு கடந்த வெள்ளியன்று வந்திருந்தது.
இதுபற்றி கூறிய ராகேஷ் மரியா, "காஸாவிற்காக நாங்கள் பழிவாங்கப்போகின்றோம். 1993 இல் நீங்கள் எங்களை தடுத்து விட்டீர்கள். ஆனால், இந்த முறை கண்டிப்பாக முடியாது. உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று எழுதி முஜாகிதீன் என்று கையெழுத்து இட்டிருந்தார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதப்பட்ட இக்கடிதத்தில் மும்பையில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
" அதனுடைய உண்மைத் தன்மையை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். ஆனாலும், இதனை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குற்றவியல் துறையும், எல்லா காவல்நிலையங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்றும் கூறியுள்ளார்.
மேலும் ரம்ஜான் பெருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மும்பையில் எந்த விபரீதமும் நடந்து விடாமல் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மும்பை போலீஸாருக்கு கமிஷனர் உத்தரவிட்டுள்ளார
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications