நெடுஞ்சாலை அருகேயுள்ள மதுபானக் கடைகள் மூடப்படுமா? தீர்ப்பை ஒத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
டெல்லி: நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீ தூரம் உள்ள மதுபானக் கடைகளை அகற்றக் கோரும் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதால் பெரும் விபத்துகள் நிகழ்வதாக கூறி நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்பட்ட மதுபானக் கடைகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

அதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மேல்முறையீடு செய்தனர்.
அதன் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை அகற்றுவதற்கான தூரத்தை 500 மீட்டரில் இருந்து 100 மீட்டராக குறைக்கக் கோரி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மனு தாக்கல் செய்தது.
மேலும் மாநில் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு வரும் நவம்பர் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. அப்போது 66 மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இதேபோல், நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீ தூரத்துக்கு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவால் தமிழகத்துக்கு ரூ.25,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கோர்ட்டில் நேற்று வாதம் முன்வைத்துள்ளது.
வருமானத்துக்காக மனித உயிர்களை பலி கொடுக்க முடியாது. வருமானத்துக்கு மாற்று வழியைத் தேட முயற்சிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications