ராஜஸ்தானில் பாஜகவை அசைக்க முடியாது! லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு மீண்டும் பின்னடைவு! புது சர்வே
ஜெய்ப்பூர்: வரும் லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் மீண்டும் பாஜகவின் கை தான் ஓங்கி இருக்கும் எனவும், காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும் புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் வெறும் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளன. சட்டசபை தேர்தலில் தோற்ற நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.

இந்நிலையில் தான் ராஜஸ்தான் லோக்சபா தேர்தல் தொடர்பாக மாத்ருபூமி - பிமார்க் (Mathurubhumi - P MARQ) சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி ராஜஸ்தான் லோக்சபா தேர்தலில் பாஜக 23 முதல் 25 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் பூஜ்ஜியம் முதல் 2 தொகுதிகளில் ஜெயிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தை பாஜக ஸ்வீப் செய்யும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 2 தொகுதி இல்லாவிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் பாஜக ஸ்வீப் செய்வது இது முதல் முறையல்ல.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அப்போது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. அப்படி இருந்தும் கூட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.
ஆனால் இப்போது ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. மாநிலத்தை பாஜக ஆட்சி செய்யும் நிலையில் லோக்சபா தேர்தலிலும் அந்த கட்சியின் கையே ஓங்கி இருக்கும் என்று மாத்ருபூமி -பூமார்க் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications