For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்மாடி.. சித்தூரில் மது வாங்க வரலாறு காணாத கூட்டம்.. கண்போரை மிரள வைக்கும் வீடியோ

Google Oneindia Tamil News

சித்தூர்: ஆந்திராவின் சித்தூரில் சமூக இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கான ஆண்கள் மொத்தமாக முண்டியடித்துக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்க குவிந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் ஏப்ரல் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி முடியவிருந்த ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 Long queue seen outside a liquor shop in Chittoor; social distancing norms flouted

ஊரடங்கு காரணமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுப்பிரியர்கள் மதுக்கிடைக்காமல் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சி குடிக்கவும் சில குடிமகன்கள் தயாராகினர். ஆனால் அப்படி கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்த பலரை நாடு முழுவதும் போலீசார் கைது செய்தனர். குடிமகன்கள் எப்போது மதுக்கடைகள் திறக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இந்நிலையில் 49 நாட்கள் கழித்து ஆந்திரா, டெல்லி,. கர்நாடகா, சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் சுமார் 49 நாட்கள் கழித்து மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. வருவாயை அதிகரிப்பதற்கு வேறு வழி இல்லாததால் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொரோனாவிற்கு இடையில் மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டார்.

இதன்படி ஆந்திரா முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் வேலூரை ஒட்டியுள்ள சித்தூர் மாவட்டத்தில் மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. சித்தூரில் உள்ள ஒரு மதுக்கடையில் மது வாங்க ஆயிரக்கணக்கான குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் நீண்ட வரிசையில் முண்டியடித்தபடி மதுவாங்க மக்கள் குவிந்து இருந்தனர். போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மதுவாங்க குவிந்த குடிமகன்கள் மிகப்பெரிய அளவில் ஆந்திராவில் குடியிருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனாவை தடுக்க சமூக இடைவெளி அவசியம் என்பதை உணராத குடிமகன்கள் எப்படியும் மது வாங்கியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நின்ற காட்சிகள். பார்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தும்.

English summary
Andhra Pradesh: Long queue seen outside a liquor shop in Chittoor; social distancing norms flouted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X