லவ் ஜிஹாத்... கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பரப்பப்படும் விபரீதம்.. அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் லவ் ஜிஹாத் வேகமாகப் பரவி வருகிறது என்று விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், லவ் ஜிஹாத் பற்றி விளக்கமான சில விவரங்களை தெரிவித்ததாக, விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

அதில் இந்த லவ் ஜிஹாத் இயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்களை காதலிப்பதும், பின்னர் அவர்களை ஏமாற்றுவது, கடத்துவது, கொலை செய்வது உள்ளிட்ட கொலை பாதக செயல்களை செய்வதும் வழக்கமாக வைத்துள்ளனர் என்று அதிர வைக்கும் தகவல்களை குறிப்பிட்டுள்ளது.

Love Jihad: How Kerala's gift to India was lapped up by the ISIS, WikiLeaks published

இதனால், லவ் ஜிஹாத், தீவிரமாக கேரளாவில் பரவ தொடங்கியுள்ளதாக, இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இவ்விரு மதப் பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள், பல்வேறு அமைப்பினரும் இதுபற்றி பகிரங்க புகார் கூறவும் தொடங்கியுள்ளனர்.

தங்கள் சமூகப் பெண்கள், இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை காதலிக்க தொடங்குவதாகவும், லவ் ஜிஹாத் இயக்கத்தில் அவர்கள் சிக்கும் அபாயம் உள்ளதாகவும், இந்து, கிறிஸ்தவ மக்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில், ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவாரங்கள், வாக்கு வங்கி அரசியலை வளர்ப்பதற்காக, இவ்வாறு தவறான பிரச்சாரங்களை மக்களிடையே பரப்பி வருவதாகவும், லவ் ஜிஹாத் என்ற இயக்கம் எதுவும் கேரளாவில் இல்லை என்றும் வலுவாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டில் இருந்தே, இத்தகைய வதந்தி கேரளாவில் பரவி வருகிறது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட இந்து மற்றும் கிறிஸ்தவ மத பெற்றோர்கள், தங்களின் பெண் குழந்தைகள் இவ்வாறு லவ் ஜிஹாத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறி அவ்வப்போது போலீசில் புகார் அளித்தும் வருகின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் இது தொடர்பாக, 2,268 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஐஎஸ் அமைப்பினரின் நடமாட்டம் கேரளாவில் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
WikiLeaks had published a report by United States diplomats that stated, 'Both Hindu and Christian groups have expressed fear and outrage at the plot The menace of Love Jihad is back.
Please Wait while comments are loading...