விரைவில் தேர்தல்.. 'பிராமணர்கள் சமூக வாக்குகளை கவர' மத்திய பிரதேச பாஜக அரசு அறிவித்த புது திட்டம்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள பாஜக அரசு தற்போதே வாக்காளர்களை கவர வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் பிராமணர்கள் சமூக வாக்குகளை கவர பிராமணர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்வராக இருக்கும் சிவராஜ் சிங் சவுகான் தற்போதே தேர்தலை மனதில் கொண்டு சில திட்டங்களை வெளியிட துவங்கி விட்டார்.

குறிப்பாக மத்திய பிரதேசத்தில் வசிக்கும் பிராமணர்கள் சமூகத்தினரின் வாக்குகளை கவரும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, பிராமணர்கள் சமூகத்தினருக்குக்காக நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இன்றி இந்தூரின் ஜனபவ் பகுதியில் பரசுராம லோக் ஆன்மீக வழித்தடம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
அது போக கோவிலின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது என்றும் கோவில் நிலங்களின் விவகாரத்தில் அங்குள்ள மதகுருக்களே மேற்கொள்ளலாம் என்று முடிவையும் எடுத்திருப்பதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். பிராமணர்கள் சமூகத்தில் அதான் கலாச்சாரத்தையும் மதத்தையும் எப்போதும் காப்பாற்றுகின்றனர் எனவே அவர்களுக்கான நல வாரியத்தை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஐந்து முதல் ஆறு சதவீதம் வரையே பிராமணர்கள் சமூகத்தினர் உள்ளனர். இருந்தாலும் அவர்களுக்காக இவ்வளவு பெரிய முடிவை எடுத்தது அங்கு பல்வேறு அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. எனினும் விந்திய மலைப்பகுதியில் ஒட்டி அமைந்துள்ள ரேவா மாவட்டத்தில் 40% மேலாக பிராமணர்கள் சமூக வாக்குகள் உள்ளன. கடந்த முறை பாஜக வெற்றி பெற இந்த வாக்குகள் கணிசமாக உதவியது.
எனவே இதை மனதில் கொண்டே இந்த முடிவை சிவராஜ் சிங் சவுகான் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விந்திய பகுதிகளில் மொத்தம் உள்ள 30 இடங்களில் 24 இடங்களில் பாஜக வென்றது. இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பாஜகவில் இருந்து விலகிய புது கட்சி துவங்கியிருக்கும் நாராயன் திருப்பதி பாஜகவிற்கு அந்த பகுதியில் கடும் சவால் அளிக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த காரணத்திற்காகவும் பாஜக பிராமணர்கள் சமூக வாக்குகளை குறிவைத்து தேர்தலுக்கு முன்பாக இத்தகைய ஒரு முடிவை அறிவித்துள்ளது. அதே வேளையில் பாஜக அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இப்போது வரை கேபினட்டில் அந்த சமூகத்திற்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் புறக்கணித்து உள்ள சிவராசன் தற்போது வாக்குகளை கவர்வதற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக காங்கிரஸ் சாடியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications