ஷாக்.. பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏவின் மகன்! மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவின் மகன் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமைறைவாகி உள்ளார். இதே மாநிலத்தில், பாஜகவை சேர்ந்த ஒருவர் பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் தற்போதைய இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இங்குள்ள சிங்குர்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருப்பவர் ராம் லாலு வைஷ்யா. இவரது மகன் பெயர் விவேகானந்த் வைஷ்யா. இவருக்கு 40 வயது ஆகிறது.

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் மாலையில் விவேகானந்த் வைஷ்யாவுக்கும், இன்னொரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த விவேகானந்த் வைஷ்யா தனது துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார். மேலும் அவர் பழங்குடியினத்தை சேர்ந்த சூர்யா பிரகாஷ் கைர்வார் (வயது 34) என்பவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேகமாக சென்றுள்ளார். இதில் கையில் குண்டு காயமடைந்த சூர்யா பிரகாஷ் உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக எம்எல்ஏ ராம் லாலு வைஷ்யாவின் மகனான விவேகானந்த் வைஷ்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி வஊழியரை சஞ்சீவ் சுக்லா என்பதை இவர் துப்பாக்கியால் சுட்டு இருந்தார். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் உள்ள நிலையில் தான் தற்போது பழங்குடியினத்தை சேர்ந்தவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் விவேகான்ந்த் வைஷ்யாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் தான் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரின் முகத்தில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியானது. அந்த நபர் பாஜகவை சேர்ந்தவர் என கூறப்பட்ட நிலையில் அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத்தகைய சூழலில் தான் தற்போது பாஜக எம்எல்ஏவின் மகன் விவேகான்ந்த வைஷ்யா பழங்குடியனத்தை சேர்ந்த சூர்ய பிரகாஷ் கைர்வாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications