ஒரு ரூபாய்க்கு அரிசி- மாணவர்களுக்கு செல்போன்கள்: ம.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி
போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வாக்குறுதியாக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
மத்தியபிரதேச சட்டசபைக்கு வரும் 25-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கை போபாலில் வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையில், உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமை, உப்பு ஆகியவை போலவே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் வழங்கப்படும். நிலமற்றோருக்கு 15 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
விவசாயிகளுக்கு புதிய பயிர் காப்பீட்டு கொள்கை செயல்படுத்தப்படும். வேளாண் பாலிடெக்னிக்குகள் உருவாக்கப்படும். 2020ஆம் ஆண்டில் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்.
அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக 5 லட்சம் இளைஞர்களுக்கு லேப்டாப் என பல்வேறு வாக்குறுதிகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், லோக்சபா எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநில பாஜக தலைவர் நரேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்











Click it and Unblock the Notifications