மோடி பெரிய மேஜிக் நிபுணர்.. என்ன மாதிரி மேஜிக்கெல்லாம் காட்டுவார் தெரியுமா? விளாசிய ராகுல் காந்தி
ஷில்லாங்: நரேந்திர மோடி சிறந்த மாயாஜாலக்காரர். அவர் நினைத்தால் இந்தியாவில் இருந்து ஜனநாயகத்தையும் மாயம் செய்து எடுத்துவிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
60 தொகுதிகள் கொண்ட, மேகாலயா மாநிலத்தில், வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தின் ஜோவை என்ற பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றபோது இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மூன்று முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று மேகாலயாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், நாலாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் உள்ளது.

மேஜிக் நிபுணர்
ராகுல் காந்தி மேலும் பேசியதாவது: பிரதமர் மோடி, ஒரு சிறந்த மேஜிக்காரர். அவர் தனது விரல் அசைவின் மூலம் பொருட்களை தோன்றவும் வைப்பார், மறையவும் வைப்பார். அப்படி பல விஷயங்களை வெற்றிகரமாக அவர் செய்தும் உள்ளார்.

மறைய வைப்பார், தோன்ற வைப்பார்
முறைகேடாளர்களான விஜய் மல்லையா, லலித் மோடி மற்றும் நீரவ் மோடி போன்றோர் மாயாஜால வகையில், இந்தியாவில் இருந்து தப்பியோடினர். அதேபோல இந்திய சட்டத்தில் இருந்து பிடிபடாத வகையில், மாயாஜாலமாக வெளிநாட்டு மண்ணில் தோன்றினர். விரைவிலே மோடியின் மேஜிக்கால், ஜனநாயகமும் இந்தியாவில் இருந்து மாயமாகும்.

ஊழலில் பங்கேற்பு
விஜய் மல்லையா, நீரவ் மோடி விவகாரங்களின் மூலம் தெரியவந்தது ஒன்றுதான். இந்த அரசு ஊழலை ஒழிக்காது, ஊழலில் பங்கேற்கும். இந்திய மக்களின் கனவுகளை நமது பிரதமர் 4 வருடங்கள் முன்பு விற்பனை செய்துவிட்டார். 15 லட்சம் பணம், 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு இப்படி பல கனவுகள்.

மக்களுக்கு பயம்
மலைவாழ் மக்கள் தங்களுக்கு சம பங்கு கிடைக்கும், நிலம் கிடைக்கும், கலாச்சாரம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்த அரசு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யய உள்ள நிலையில், மக்களுக்கு நம்பிக்கையின்மை, வேலைவாய்ப்பின்மை, அச்சம், வன்முறை ஆகியவற்றைதான் பரிசாக அளித்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications