மகா.. சபாநாயகர் போட்டியிலிருந்து பாஜக விலகல்..காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்
மகாராஷ்டிரா சபாநாயகர் பதவிக்கான போட்டியிலிருந்து பாஜக விலகி உள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா சபாநாயகர் பதவிக்கான போட்டியிலிருந்து பாஜக விலகி உள்ளது. பாஜக வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோல் போட்டியின்றி தேர்வாகிறார்.
மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார். நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இவர் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

சிவசேனாவின் கூட்டணிக்கு 169 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். அம்மாநில சட்டசபை தற்காலிக சபாநாயகராக என்சிபி எம்.எல்.ஏ. திலீப் வல்சே பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தத்தின்படி காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்படும்.
அதே சமயம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும். இந்த நிலையில் மகாராஷ்டிராவின் சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோல் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. பல வருடங்களாக பாஜகவில் இவர் இருந்துள்ளார். 2014ல் இவர் பாஜகவில் இருந்து போட்டியிட்டு லோக்சபா எம்பியாக தேர்வானார்.
இந்த நிலையில் திடீர் என்று மகாராஷ்டிரா சபாநாயகர் பதவிக்கான போட்டியிலிருந்து பாஜக விலகி உள்ளது. பாஜக வேட்பாளர் கிஷான் கத்தோர் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் காங்கிரஸ் கட்சியின் நானா பாட்டோல் போட்டியின்றி தேர்வாகிறார்.
இவர் பாஜக கட்சியில் இருந்து விலகி கடந்த வருடம்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் இவர் லோக்சபா தேர்தலில் நிற்காமல் சட்டசபை தேர்தலில் நின்று சகோலி தொகுதியில் நின்று வென்றார். பாஜகவில் இணைவதற்கு முன் காங்கிரஸ் கட்சி சார்பாக இவர் 4 முறை சகோலி தொகுதியில் வென்றார்.
தற்போது இவர் சபாநாயகராக்கப்பட உள்ளார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இன்னும் துணை முதல்வரை தேர்வு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications