லட்சம் விவசாயிகளுக்கு ஒரே ஆதார் எண், வங்கிக் கணக்கு எண்.... விழிபிதுங்கும் வங்கி அதிகாரிகள்
மகாராஷ்டிர மாநிலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரே ஆதார் எண், ஒரே வங்கிக் கணக்கு எண் இருப்பதால் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரே ஆதார் எண் மற்றும் ஒரே வங்கிக் கணக்கு எண் இருப்பதாக வங்கிகள் பட்டியலை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
12 இலக்கம் கொண்ட ஆதார் எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்களை போலியாக பெற்றுக் கொள்வோர் கண்டறியப்படுவர் என்று கூறப்பட்டது. மேலும் அனைத்து நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் அந்த எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் மாநில அளவிலான வங்கியர்கள் குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விவசாயிகளின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு குறித்து பேசப்பட்டது.
77 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய உள்ள நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஒரே ஆதார் எண்ணும், ஒரே வங்கி எண்ணும் உள்ளதாக வங்கி அதிகாரிகள் மாநில அரசிடம் பட்டியலை அளித்தனர்.
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வங்கிகளில் பெற்ற கடன்களை 2.5 லட்சம் விவசாயிகள் திரும்ப செலுத்தி விட்டனர். எனினும் அதே வங்கிகளில் அவர்கள் கடன் நிலுவைத் தொகையில் உள்ளதாக வங்கி பட்டியல் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications