பிரியங்காவை தலைவியாக்குங்கள்... காங்கிரஸாரின் போஸ்டர்களால் பரபரப்பு!
லக்னோ: பிரியங்கா காந்தி வாத்ராவை காங்கிரஸ் தலைவராக்கக் கோரி உத்தர பிரதேசத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள சில தெருக்களில் திங்கட்கிழமை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்குமாறு தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போஸ்டரில் கூறியிருப்பதாவது,
அன்னை சோனியாவே, பிரியங்காவுக்கு பிறந்தநாள் பரிசாக காங்கிரஸ் தலைவர் பதவியை பரிசளியுங்கள். அவர் மூலம் காங்கிரஸ் புத்துயிர் பெறும். திக்விஜய் சிங்கின் பேச்சை கேட்க வேண்டாம், தொண்டர்கள் கூறுவதை கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும் என்று அடிக்கடி தெரிவித்து வருகிறார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதமும் உத்தர பிரதேசத்தில் இது போன்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ராகுலை காங்கிரஸ் தலைவராக்குமாறு கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தான் தொண்டர்கள் இவ்வாறு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications