பிரபல மலையாள நடிகர் அகில் விஸ்வநாத் மர்ம மரணம்.. வீட்டில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் அகில் விஸ்வநாத் (30), அவரது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு 'சோழா' படத்திற்காக கேரள அரசின் திரைப்பட விருதை பெற்றவர் அகில் விஸ்வநாத். அவரது மறைவுக்கு, திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு வெளியான 'சோழா' (Chola) படத்திற்கு கேரள அரசின் திரைப்பட விருது பெற்றவர் நடிகர் அகில் விஸ்வநாத் (30). இவர் 'ஓப்பரேஷன் ஜாவா' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மாங்காண்டி படத்தில் நடித்ததற்காக அகில், அவரது சகோதரர் அருணுடன் சேர்ந்து கேரள மாநில அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெற்றார்.

அகில் விஸ்வநாத்தின் தந்தை விஸ்வநாத் சமீபத்தில் பைக் விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அகிலின் தாயார் கீதா இன்று வேலைக்குச் செல்ல தயாராகும்போது, அகில் மயங்கிய நிலையில் கிடப்பதைப் பார்த்துள்ளார்.
இதையடுத்து அவரை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அகில் விஸ்வநாத் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
இருப்பினும் முதற்கட்ட தகவல்கள், அவர் உடல்நலப் பிரச்சனைகளால் மரணம் அடைந்திருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. அகில் விஸ்வநாத் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அகில் விஸ்வநாத் மறைவுக்கு, திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications