பொய்யா பேசறீங்களே.. வெட்கமா இல்லையா... தோப்புக்கரணம் போடுங்க.. மோடியை விளாசிய மமதா!
குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் மோடி முட்டி போட வேண்டும் என்று மம்தா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: "இந்த மோடி இப்படி பொய் பொய்யா பேசுறாரே.. வெட்கமாவே இல்லையா? இப்படியே எங்க மேல ஒவ்வொரு பழியா போட்டுட்டு இருந்தால் எப்படி? எங்க மேல சொல்ற குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாட்டி, பிரதமர் தோப்புக்கரணம் போடணும்" என்று மம்தா பானர்ஜி கோபத்தில் செம காண்டாக பேசியுள்ளார்.
கொல்கத்தாவில் அமித்ஷா பேரணி நடத்தியபோது பெரும் கலவரம் மூண்டது. பாஜகவினரும், திரினமூல் காங்கிரஸாரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இந்த மோதலின்போது வங்க புரட்சியாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (இவரை வங்கத்து பெரியார் என்று சொல்கிறார்கள் ) சிலையை நொறுக்கி விட்டனர். இது மேற்கு வங்கத்தை அதிர வைத்துள்ளது.

அரசியலாக்கிய மோடி
சிலையை உடைத்தது நீ தான் என்று இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பிரச்சனையை அப்படியே விட்டிருந்தால்கூட ஒருவழியாக முடிஞ்சிருக்கும் போல. இதனை ஊதி ஊதி பெரிசாக்கிவிட்டார் மோடி. உத்திரபிரதேசத்தில் மாவ் என்ற பகுதியில் பிரச்சாரத்துக்கு போனவர், இந்த சிலை விஷயத்தை பேசி அரசியலாக்கி விட்டார்.

மோடி பிரச்சாரம்
மம்தா கட்சி கலவரம் செய்யும் கட்சி என்பது சிலை விஷயத்திலேயே தெரிந்துவிட்டது என்றும், வேண்டுமானால் பாஜகவே ஈஸ்வர சந்திர வித்யாசாகருக்கு ஒரு சிலையை ஏற்பாடு செய்து அதே இடத்தில் நிறுவ ஏற்பாடு செய்யும் என்றும் சொன்னார்.

பணம் இருக்கு
மோடி இப்படி பேசியது, மம்தா பானர்ஜிக்கு மேலும் கடுப்பை ஏற்றிவிட்டது. "சிலையை செஞ்சு தர்றோம்னு பிரதமர் சொல்றாரே? சிலையை நிறுவ எங்க கிட்ட பணம் இருக்கு. புது சிலையை மோடி வெச்சிடுவார், ஆனால் 200 வருட பாரம்பரிய சிலையை அவரால் திருப்பி தர முடியுமா?

முட்டி போடுங்க
என்னமோ நாங்கதான் சிலையை உடைச்சோம், வன்முறையில இறங்கினோம்னு பேசறாரே? உங்க கட்சியினர் உடைச்சதுக்கு ஆதாரம் எங்க கிட்ட இருக்கு. உங்களுக்கு வெட்கமா இல்லையா? உங்க கிட்ட ஆதாரம் இருந்தால் நிரூபிச்சு காட்டுங்க. அப்படி இல்லைன்னா, ஜெயிலுக்குள்ள தூக்கி வெச்சிடுவோம், எங்க மேல பழி சொன்னதை நிரூபிக்க முடியலேன்னா, மோடி முட்டி போடணும், தோப்புக்கரணம் போடணும்? அதுக்கு தயாரா?" என்று சீறியுள்ளார்.

சின்ன கவுண்டர்
இவங்க சண்டையைப் பார்த்தா சின்னக் கவுண்டர் படத்துல மனோரமாவும், சுகன்யாவும் போட்டுக்கிற ஆவேச சண்டை மாதிரியே தெரியுதுல்ல.. அப்படீன்னா நடுவுல சிக்கிக்கிட்ட கவுண்டமணி, செந்தில் யார்னு கேக்கறீங்களா.. இந்த செய்தியைப் படிக்கிற நீங்களும், எழுதுன நாங்களும், மொத்த ஜனமும்தான்!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications