இறங்கி வந்தேன் அவ்ளோதான்.. மமதாவை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாஜகவினர்.. ஓடவிட்ட தீதி - வீடியோ!
மேற்கு வங்கத்தில் பாஜகவினர் சிலர் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டது பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் சிலர் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை பார்த்து ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டது பெரிய வைரலாகி உள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரம் உச்சம் பெற்று இருக்கிறது. பிரதமர் மோடி அங்கு தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தினமும் அவர் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜியை மிக மிக கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் பேசிய மோடி, மமதா பானர்ஜி இந்து மக்களுக்கு எதிராக பேசுகிறார். இங்கு இந்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூட சொல்ல முடியவில்லை. அப்படி சொன்னால் அவர்கள் மீது மமதா நடவடிக்கை எடுக்கிறார். இந்துக்கள் மமதாவை பார்த்து அச்சப்பட்டு இருக்கிறார்கள்.

மோடி என்ன சொன்னார்
மோடி தனது பேச்சில், மமதா ராமரை பார்த்து அச்சப்படுகிறார். அதனால்தான் அவர் ஜெய் ஸ்ரீ ராம் என்ற வார்த்தையை சொல்வதற்கு கூட பயப்படுகிறார் என்று கூறினார். இதனால் இந்த ஜெய் ஸ்ரீ ராமை வைத்து மேற்கு வங்க தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

மமதா பிரச்சாரம்
இந்த நிலையில் மமதா பானர்ஜி பிரச்சாரம் செய்வதற்காக காரில் சந்திரகோனா நோக்கி சென்று கொண்டு இருந்தார். அங்கு ரத்தபல்லாபூர் அருகே அவர் காரில் சென்ற போது மக்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள். அப்போது பாஜகவினர் சிலர் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என்று கத்தினார்கள்.
|
இறங்கி வந்தார்
இதை கேட்டதும் மமதா காரை நிறுத்த சொல்லிவிட்டு, வெளியே இறங்கி வந்தார். ஜெய் ஸ்ரீராம் என்று கூறிய நபர்களை பார்த்து, ''இங்க வாங்க.. ஏன் இப்படி கத்துறீங்க.. என்ன அவமானப்படுத்த ஆசைப்படுறீங்களா'' என்று கோபமாக கேட்டார்.

வேகமாக ஓடி சென்றனர்
ஆனால் மமதாவை பார்த்த பாஜகவினர் வேகமாக அங்கிருந்து ஓடி சென்றனர். உடனே மமதா ''ஏன் ஓடுறீங்க.. ஏன் கத்திட்டு இப்படி பயப்படுறீங்க'' என்று மீண்டும் கோபமாக கேட்டார். தற்போது இந்த மொத்த சம்பவமும் வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
-
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications