கொள்ளையர்களின் ராணி மம்தா பானர்ஜி.. திரிணாமூல் தலைவர்களுக்கு தோழிகள் ஏராளம் -பாஜக எம்பி கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொள்ளையர்களின் ராணி என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சவுமித்ரா கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானதால் அமலாக்கத்துறையும் இந்த விசாரணையில் இறங்கியது.

ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல்

ரூ.20 கோடி ரொக்கம் பறிமுதல்

அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அவரது உதவியாளர் அர்பிதா முகெர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20 மொபைல் போன்கள், முக்கிய ஆவணங்கள், பதிவுகள், எலெக்டிரானிக் கருவுகள், வெளிநாட்டு நாணயங்கள், தங்கம் உள்ளிட்ட பல பொருட்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்.

 பாஜக எம்.பி. கடும் விமர்சனம்

பாஜக எம்.பி. கடும் விமர்சனம்

இதுகுறித்து பேசிய மேற்கு வங்க மாநில பாஜக எம்.பி. சவுமித்ரா கான் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்து உள்ளார். "திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் பெரிய அளவிலான முறைகேடுகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். மம்தா பானர்ஜியின் தலைமையில் திருடர்களின் கட்சியாக திரிணாமூல் காங்கிரஸ் உருவெடுத்து இருக்கிறது.

 கொள்ளையர்களின் ராணி

கொள்ளையர்களின் ராணி

திரிணாமூல் காங்கிரஸின் மூத்த தலைவர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், அபிஷேக் பானர்ஜி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கொள்ளையர்களின் ராணி. பார்த்தா சாட்டர்ஜி இன்று கைதாகியுள்ளார். நாளை ஃபிர்ஹாத் ஹக்கீம் கைது செய்யப்படுவார். அடுத்து அபிஷேக் பானர்ஜி கைது செய்யப்படுவார். மம்தா பானர்ஜியை நம்பவே முடியாது.

மம்தா பானர்ஜியின் மருமகன்

மம்தா பானர்ஜியின் மருமகன்

மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி ரூ.50,000 கோடி ஊழல் செய்து இருக்கிறார். அந்த ரூ.50,000 கோடிக்கும் அபிஷேக் பானர்ஜியே உரிமையாளர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியால் மேற்கு வங்கம் சுருங்கிக்கொண்டிருக்கிறது. மம்தா பானர்ஜி சாரதா முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறார். அவரது மருமகன் நிலக்கரி முறைகேடு, பசு கடத்தல், பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மேற்கு வங்கத்தை திருடர்களின் மாநிலமாக மாற்றி இருக்கிறார்கள். இது மிகவும் வெட்கக்கேடான விசயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+