அமித்ஷா சொல்வதெல்லாம் பொய்... விளாசும் மம்தா பானர்ஜி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ள நிலையில், மேற்கு வங்க அரசு தொழில் துறை என அனைத்திலும் நம்பர் ஒன் ஆக உள்ளதாகவும், அமித்ஷா பொய் செல்வதாகவும் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக உள்ளது. அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டார். பாஜக சார்பில் நடந்த பேரணியில் பங்கேற்ற அவர் மம்தா பானர்ஜி அனைத்து துறைகளிலும் மம்தா அரசு தோல்வி அடைந்துவிட்டது.
நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, ஊழல், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றைத் தவிர மற்ற பல நிலைகளில் மேற்கு வங்காளம் பின்தங்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-அமித்ஷா நீங்கள் உள்துறை மந்திரி. உங்கள் கட்சிக்காரர்கள் கூறும் பொய்யான தகவல்களை அப்படியே தெரிவிப்பது உங்களுக்கு அழகல்ல.தொழில்துறையில் மேற்கு வங்காளம் பூஜ்ஜியமாக இருப்பதாக அமித்ஷா கூறினார். ஆனால் உண்மையில், சிறு, குறு, நடுத்தர தொழில்களில் நமது மாநிலம்தான் 'நம்பர் 1' ஆக இருக்கிறது.
நாம் கிராமப்புறங்களில் போதுமான சாலைகளை அமைக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். அதிலும் முன்னணி மாநிலம் மேற்கு வங்காளம்தான். இந்த தகவல் குறித்து மத்திய அரசே தகவல் வெளியிட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தின் வளர்ச்சி குறித்து நான் விரிவான தகவல்களை அளிப்பேன் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications