ராகுலின் விஸ்வரூபத்திற்கு பின்னால் நிற்கும் சூத்திரதாரி.. யார் இந்த அசோக் கெலாட்?
காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், கட்சியில் அவர் முன்னிலை படுத்தப்படுவதற்கும் பின்னால் மூத்த தலைவர் அசோக் கெலாட் இருக்கிறார்.
Recommended Video

அஹமதாபாத்: காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், கட்சியில் அவர் முன்னிலை படுத்தப்படுவதற்கும் பின்னால் மூத்த தலைவர் அசோக் கெலாட் இருக்கிறார். குஜராத் தேர்தலுக்கு முன்பாகவே ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆனதற்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான கெலாட், குஜராத் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். ராகுல் மீது இருக்கும் சில எதிர்மறை விமர்சனங்களை மாற்றுவதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

தலைவர் ஆனார்
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில் சென்ற வாரம் அவர் கட்சி உறுப்பினர்களால் ஒருமனதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தலைவர் ஆனதற்கு பின் சோனியா காந்தி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சோனியா காந்தியைவிட ராகுலின் வெற்றிக்கு பின் அதிகம் இருந்தது அசோக் கெலாட்தான்.

அசோக் கெலாட் யார்
இந்திரா காந்தி காலத்து காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட். கட்சியின் தீவிர விசுவாசி, மூத்த தலைவர். மத்திய சுற்றுலா மற்றும் விமான துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். இந்திரா காந்திக்கு மட்டும் நெருக்கமாக இல்லாமல் ராஜிவ் காந்தி, சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக இருந்துள்ளார்.

முக்கிய பங்கு
இந்த தேர்தலில் ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதற்கு முக்கிய காரணமாக ராகுல் காந்தியும் அசோக் கெலாட்டும்தான் இருப்பார்கள். கெலாட்தான், குஜராத் மக்களின் நாடியை அறிந்து, தேர்தலுக்கு முன்பாகவே ராகுலை காங்கிரஸ் தலைவர் ஆக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்.

மாற்றினார்
சில காலம் முன்பு வரை ராகுலை இந்தியாவே 'பப்பு' என்று கிண்டல் செய்து வந்தது. அவரது குழந்தை தனமான நடவடிக்கையால் இப்படி கிண்டல் செய்யப்பட்டார். ஆனால் குஜராத் பிரச்சாரத்தில் இவரின் பேச்சு பாராட்டப்பட்டது. அதற்கு பின்னால் இருந்தது அசோக் கெலாட்தான். இவர்தான் ராகுல் என்ன பேசவேண்டும், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியவர்.

காங்கிரசின் நிழல்
அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர்களின் நிழல் என்று கூறப்படுகிறது. இந்திராவும், ராஜிவ் காந்தியும் பல முக்கிய முடிவுகளை இவரின் ஆலோசனையின் பேரிலேயே எடுத்தனர். அந்த அளவுக்கு அரசியல் நுணுக்கம் தெரிந்தவர்.

புதிய அதிகாரம்
ஒருவேளை குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் அசோக் கெலாட் முக்கிய பொறுப்பை பெறுவார். காங்கிரசில் யாரும் செய்யாத பல வித்தியாசமான தேர்தல் அணுகுமுறைகளையும், அதிரடிகளையும் அசோக் கெலாட் கடைபிடிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications