மகளை பலாத்காரம் செய்தவருக்கு விருந்து வைத்து பிறப்புறுப்பை அறுத்து கொன்ற தந்தை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பெற்ற மகளை பலாத்காரம் செய்த நபரை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, சாப்பாடு போட்ட பின்னர் அந்த நபரின் பிறப்புறுப்பை துண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டைசேர்ந்த ஓம்கார் சிங் என்ற 45 வயதுக்காரர் அச்சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இதை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி உள்ளார்.

தந்தையிடம் கூறிய சிறுமி:

ஆனால் இது குறித்து அன்றைய தினமே சிறுமி தந்தையிடம் கூறி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை நிதானமாக திட்டம் தீட்டி உள்ளார்.

"ஸ்பெஷல்" விருந்து:

வன்மத்துடன் இருந்த அவர் சிங்கை இரவு விருந்துக்கு அழைத்து உள்ளார். இதை நம்பி அவரும் விருந்து உண்ண வந்து உள்ளார்.

சாப்பாடு போட்டு தண்டனை:

வயிறு முட்ட உணவு உண்டவுடன் அந்த சிறுமியின் தந்தை, சிங்கை அவர் உட்கார்ந்த சேரிலேயே கட்டி போட்டார்.

பிறப்புறுப்பு துண்டிப்பு:

பின்னர் இரும்புக் குறடு ஒன்றை எடுத்து நன்றாக சூடுபடுத்தி குற்றவாளியின் பிறப்புறுப்பை துண்டித்து விட்டார். இதில் துடிதுடித்து அந்த நபரை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.

கொலைவழக்கு பதிவு:

பின்னர் காவல் நிலையம் சென்ற பெண்ணின் தந்தை குற்றத்தை ஒப்புகொண்டு சரண் அடைந்து உள்ளார். போலீசார் அவர்மீது கொலைவழக்கு பதிவு செய்துள்ளனர். ஓம்கார் சிங்கின் உடலானது ஜிடிபி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அம்மனிதன் கிட்டதட்ட 2 மாதங்களுக்கும் மேலாக அச்சிறுமியை பாலியல் வ்ன்முறைக்கு ஈடுபடுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+