For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணமகள் பொண்ணா? பையனா? – பாவம், மாப்பிள்ளையே கன்பியூஸ் ஆய்ட்டார்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேசத்தில் பெண் என்று கூறி ஆண் ஒருவரை, ஆணுக்குத் திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாலக் ராம். இவர் நடன குழு தலைவர் ஹுகம் சிங்கிடம் ரூபாய் 50 ஆயிரம் கொடுத்து தனக்கு பெண் பார்த்து தருமாறு கூறி உள்ளார்.

நடன குழு தலைவரும் அவருக்கு பெண் பார்த்து தருவதாக உறுதி அளித்து உள்ளார்.

மணப்பெண் அறிமுகம்:

சில நாட்கள் கழித்து ஹூகம் சிங் ராஜ் குமாரி மன நலம் சரி இல்லாதவர் என ஒரு வரை மணப்பெண்ணாக அறிமுகப் படுத்தி உள்ளார்.அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளதாகவும் கூறி உள்ளார்.

ஒரு வாரத்தில் திருமணம்:

இதை தொடர்ந்து பாலக் ராம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய தொடங்கினார்.அவர்கள் திருமணம் ஒரு வாரம் கழித்து நடைபெறுவதாக இருந்தது.

ஹையய்யோ போச்சே:

பாலக் ராம் ராஜ் குமாரியுடன் பழகி வந்தார். இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் ராஜ் குமாரி பெண் அல்ல என்றும் 15 வயது ராஜ் குமார் என்ற சிறுவன் என்றும் தெரிய வந்தது.

ஜாலியா இருந்துச்சுங்கோ:

இது குறித்து பாலக்ராம் கூறும் போது, "இது ஆச்சரியமாக இருந்த போதிலும் சேலை அணிந்த ராஜ் குமாரை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் பெண் வேடத்தில் ஆண் இருப்பார் என எண்ணவில்லை" எனக் கூறியுள்ளார்.

English summary
A man from Uttar Pradesh paid Rs 50,000 to get married but to his disappointment the 'bride' turned out to be a boy. According to a report, Balak Ram, 37, reportedly paid the money to a dance troupe leader, Hukam Singh, who promised to find him a bride.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X