டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்
டெல்லி: டெல்லியில் தெரு நாய் ஒன்றை காப்பாற்ற ஒருவர் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது ஆஸ்டன் மார்டின் காரை மரத்தில் மோதியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிஷ் சபர்வால். அவர் தனக்கு சொந்தமான ரூ. 3 கோடி மதிப்புள்ள ஆஸ்டன் மார்டின் காரில் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியே கிளம்பினார். அவர் சானக்யாபுரியில் உள்ள இத்தாலிய தூதரகம் அருகே சென்று கொண்டிருக்கையில் தெரு நாய் ஒன்று சாலையை கடந்துள்ளது. அதை பார்த்த சபர்வால் நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்ப அது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சபர்வால் காயம் இன்றி தப்பித்துக் கொண்டார். ஆனால் காரின் முன்பக்கம் கடும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். கார் உரிமையாளரிடம் விசாரித்து வருகிறோம் என்றார்.
விபத்துக்குள்ளான கார் ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் மாடல் ஆகும். 4 ஆயிரத்து 735 சிசி என்ஜின் கொண்ட அந்த கார் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. திறமை வாய்ந்த டிரைவர்களால் மட்டுமே அந்த கரை ஓட்ட முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications