மணிப்பூர்: ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல அனுமதித்த போலீஸ்-சாலை மார்க்கமாக செல்வேன் என பிடிவாதம்!
இம்பால்: மணிப்பூர் சென்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாலை மார்க்கமாக சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அம்மாநில போலீஸ் அனுமதி மறுத்தது. அதேநேரத்தில் ஹெலிகாப்டர் மூலமாக சென்று பாதிக்கப்ப்ட்ட மக்களை சந்திக்கலாம் என போலீஸ் தரப்பு தெரிவித்த யோசனையை ராகுல் தரப்பு முதலில் நிராகரித்து பின்னர் ஒப்புக் கொண்டது.
மணிப்பூரில் 2 மாதங்களாக நீடிக்கும் வன்முறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கட்டுப்படுத்தவில்லை என்பது எதிர்க்க்கட்சிகளின் புகார். மணிப்பூர் மோதல்கள் நாளும் தொடருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். 50,000 பாதுகாப்பு படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை கட்டுப்படுத்தப்படவில்லை.

2 மாத காலம் நீடிக்கும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மணிப்பூர் மாநிலத்துக்கும் நேரிலும் செல்லவில்லை பிரதமர் மோடி என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் மணிப்பூருக்கு 2 நாட்கள் பயணமாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை வந்தடைந்தார். இம்பால் விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க காரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொன்டார். ஆனால் குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் ராகுல் காந்தியை சாலை மார்க்கமாக செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தியின் பாதுகாப்பு காரணங்களுக்காக மணிப்பூர் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும் ராகுல் பொதுமக்களை சந்திக்க, ஹெலிகாப்டர் மூலம் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தல்களை நிராகரித்து சாலை மார்க்கமாகத்தான் செல்வோம் என ராகுல் தரப்பு பிடிவாதம் காட்டியதாகவும் தகவல்கள் தெரிவித்தன. பின்னர் ஒருவழியாக ஹெலிகாப்டர் மூலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்தார்.
இதனிடையே ராகுல் காந்தியை மணிப்பூர் போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications