சோனியாவை தவிர மனைவியிடம் மட்டுமே மன்மோகன் பேசுவார், ஆனால் மோடி..: அமித் ஷா
மும்பை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தவிர்த்து தனது மனைவியுடன் மட்டுமே பேசுவார். ஆனால் தற்போதைய பிரதமர் மோடி மக்கள் அனைவரிடமும் பேசுவார் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலையொட்டி பாஜக தலைவர்கள் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா மும்பையில் பிரச்சாரம் செய்தார்.
மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் பேசிய அவர் கூறுகையில்,

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங் மவுன பிரதமர். ஆனால் மோடியோ பேசும் பிரதமர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த பிரதமர் மவுனம் சாதித்தவர். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தவிர தனது மனைவியுடன் மட்டுமே பேசுவார்.

மோடி
பாஜக மகக்ளுக்கு பேசும் பிரதமரை அளித்துள்ளது. அவர் ஜப்பான், நேபாள் சென்றார். மேலும் அமெரிக்காவில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் உரை நிகழ்த்தினார். அவர் சீன அதிபருடன் பேசினார்.

இந்தி
அமெரிக்கா மற்றும் ஜப்பானில் நரேந்திர பாய் இந்தியில் பேசினார். அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். மோடிக்கு 56 இன்ச் மார்பு இருப்பதால் அவர் செங்கோட்டையில் குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் நின்று பேசவில்லை.

சோனியா
மோடியின் 100 நாள் அரசின் கணக்குகளை கேட்கிறாரே சோனியா. 60 ஆண்டு கால ஆட்சி கணக்கை காட்டியதா காங்கிரஸ்?

ராகுல்
எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு நம் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுக்கிறார்கள். ராகுல் காந்தி இத்தாலிய கண்ணாடி அணிந்திருப்பதால் அது அவருக்கு தெரியாது.

ஊழல்
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தனது 15 ஆண்டு கால ஆட்சியில் 101 ஊழல்களை செய்துள்ளது. ஒரு காலத்தில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்த மகாராஷ்டிராவில் தற்போது விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். மேலும் மின்சாரமும், தண்ணீரும் இல்லை. இதற்கு எல்லாம் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸின் முறையற்ற ஆட்சி தான் காரணம்.

சிவசேனா
மேடையில் அரை மணிநேரம் பேசிய அமித் ஷா சிவசேனா பற்றியோ மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா பற்றியோ வாய் திறக்கவில்லை.












Click it and Unblock the Notifications