ஜம்மு காஷ்மீரில் 92% பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்வு.. வெளியுறவுத்துறை முக்கிய அறிவிப்பு
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பெரும்பான்மையான பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும் 92 சதவீத பகுதிகளில் எந்தவிதமான கட்டுபாடுகளும் இல்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அன்று முதல் ஜம்மு காஷ்மீர் இணைய சேவைகள், மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டன. 144 தடை உத்தரவு பல இடங்களில் பிடிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.

ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து அமலில் இருந்து வந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என ஐநா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் முழுமையாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது இந்திய அரசு.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராவேஸ் குமார் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரின் 92 சதவீத பகுதியில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். லேண்ட்லைன் தொடர்பு முழுமையாக சீரடைந்துள்ளது. அனைத்து தொலைபேசி பரிமாற்றங்களும் செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீநகர் உட்பட மொபைல் இணைப்பு படிப்படியாக விரிவுபடுத்தப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள 199 காவல் நிலையங்களில், 11 காவல் நிலையங்களுக்கு மட்டுமே பகல் நேர கட்டுப்பாடுகள் உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை. மின்சாரம், குடிநீர் வழங்கல், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் உறுதி செய்யப்படுகின்றன. "மருத்துவமனை மற்றும் மருத்துவ வசதிகள் சாதாரணமாக இயங்குகின்றன. மருந்துகளுக்கு பஞ்சமில்லை.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து அனைத்து வகையான 376 மருந்துகளும் அத்தியாவசியமான 62 மருந்துகளும் காஷ்மீர் மாநிலத்தில் போதுமான சப்ளை உள்ளது. கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் எங்களிடம் உள்ளன. 95 சதவீத மருத்துவர்கள் பணியில் உள்ளார்கள். 4லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளார்கள். 35 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 11 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் காஷ்மீர் மாநிலத்தில் எப்போதும் போல் இயல்பாக நடக்கிறது." இவ்வாறு ராவேஸ் குமார் கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications