For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டிறைச்சிக்கு தடையா? மேகாலயா பாஜக கூண்டோடு காலி- கட்சி ஆபீஸ் இழுத்து மூடல்!

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து மேகாலயா பாஜக தலைவர்களும் தொண்டர்களும் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகிவிட்டனர்.

By Mathi
Google Oneindia Tamil News

ஷில்லாங்: மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து விலகிய நிலையில் தொண்டர்களும் கூண்டோடு வெளியேறி மாவட்டங்களில் கட்சி தலைமை அலுவலகங்களையும் இழுத்து மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டிறைச்சிக்கு மறைமுகமாக மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Meghalaya BJP Workers Shut Down District Office

வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்போர் அதிகம். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை அம்மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தடையைக் கண்டித்து மேகாலயாவில் பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து பாஜகவை விட்டே விலகுவதாக அறிவித்தனர். தலைவர்கள் அடுத்தடுத்து விலகிய நிலையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்களும் பாஜகவுக்கு முழுக்கு போட்டுவிட்டனர்.

இதையடுத்து மாவட்டங்களில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகங்களையும் தொண்டர்கள் இழுத்து மூடிவிட்டனர். தங்களது தேசிய இனத்தின் பிரதான உணவே மாட்டிறைச்சி; இதற்கு தடை விதிப்பது என்பது எங்கள் இனத்தின் பண்பாட்டை அழிக்கும் செயல் என்பது மேகாலயா மக்களின் குரல்.

English summary
BJP is facing a major political crisis in Meghalaya. More than 200 party workers quitting taking the party flag down and shutting the party office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X