மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 15 பேர்.. மீட்பு படையினருக்கு சவால் விடும் எலி துளைகள்.. பகீர் கதை!
மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரை மீட்பது பெரிய சவாலான காரியமாக மாறியுள்ளது.
Recommended Video

ஷில்லாங்: மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 15 பேரை மீட்பது பெரிய சவாலான காரியமாக மாறியுள்ளது.
மேகாலயாவின் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த இரண்டு வாரம் முன் 15 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது திடீர் என்று சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் கடந்த 12ம் தேதி குகைக்குள் இருந்த 15 பேரும் நீரில் சிக்கினார்கள்.இந்த ஊழியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ரேட் ஹோல் என்றால் என்ன
இந்த பணியாளர்கள் மாட்டிக் கொண்டு சுரங்கங்கள் ரேட் ஹோல் (rat hole) - எலி துளை சுரங்கங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் துளைகள் இருக்கும். கைகளால் தோண்டப்பட்ட சுரங்கங்கள் என்பதால் இந்த சுரங்கங்களை ரேட் ஹோல் சுரங்கங்கள் என்று அழைக்கிறார்கள். பார்க்கக் எலிகள் பெரிய அளவில் நோண்டிய குழிகள் போல இது இருக்கும்.

எப்படி செய்வார்கள்
இந்த சுரங்கங்களை பெரும்பாலும் கைகளால் ஆயுதங்கள் வைத்து தோண்டுவார்கள். சில சமயங்களில், சிறிய சிறிய கருவிகள் வைத்தும் தோண்டுவார்கள். ஆனால் என்னதான் எலி துளை சுரங்கங்களாக இருந்தாலும் 300 அடி வரை கூட இந்த சுரங்கங்கள் அமைக்கப்படும். மேகாலயாவில் பணியாளர்கள் மாட்டி இருக்கும் சுரங்கங்களும் 300 அடி கொண்ட சுரங்கங்கள்தான்.

தடை செய்தது
இது போன்ற எலி துளை சுரங்கங்கள் மேகாலயாவில் நிறைய உள்ளது. ஆனால் ஏற்கனவே அங்கு ஹைகோர்ட், சுரங்கங்களை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் மேகாலயாவில் அனுமதியின்றி நிறைய சுரங்கங்கள் இப்படி செயல்பட்டு வருகிறது.

அதில்தான் விழுந்தனர்
இப்படி அனுமதி இல்லாமல் செயல்பட்ட சுரங்கத்தில்தான் பணியாளர்கள் விழுந்தனர். இது கீழே செல்ல செல்ல சிறியதாக ஆகிக்கொண்டே இருக்கும். இதில் இறங்கி மீட்பு பணிகளை செய்வது மிகவும் சிரமம். இதன் காரணமாகவே இதில் விழுந்து இருக்கும் பணியாளர்களை மீட்பது பெரிய சவாலான காரியமாக மாறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications