இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் அந்த ஆரஞ்சு நிறம்தான்.. மெகபூபா முஃப்தி
Recommended Video
ஸ்ரீநகர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துடன் மோதிய இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு முழு காரணம் அந்த ஆரஞ்சு நிற ஜெர்ஸிதான் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் நேற்றைய தினம் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதியது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்களை குவித்தது.
மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில் 306 ரன்கள் எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 2019-ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக தோல்வி அடைந்தது.

ஜம்மு- காஷ்மீர்
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கூறுகையில், என்னை மூடநம்பிக்கைவாதி என கூறினாலும் நான் சொல்ல வேண்டியதை சொல்லித்தான் தீருவேன்.

நீல நிற ஜெர்ஸி
இந்திய அணி உலகக் கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு புதிய ஆரஞ்சு நிற ஜெர்ஸியே காரணம் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்திய அணி இந்த போட்டிக்கு வழக்கமாக அணியும் நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸி அணிந்து விளையாடியது.
|
புதிய ஜெர்ஸி
இந்த திடீர் மாற்றத்துக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் இங்கிலாந்து அணியின் ஜெர்ஸியும் நீல நிறத்தில் இருந்ததால் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தீர்வு
சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து நேற்றைய தினம் ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சர்வதேச தண்ணீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

முழு ஆற்றல்
சென்னை நகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் நாம் கிரிக்கெட் அணியின் சீருடை குறித்து பேசி வருகிறோம். நிறம் விஷயத்தில் நாம் நமது முழு ஆற்றலை செலவிடுகிறோம் என கூறியிருந்த முஃப்தி இன்று திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications