தமிழகம் எதிர்த்தாலும் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவது உறுதி: கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
பெங்களூரு: காவிரி ஆற்றுக்கு குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் இரு அணைகளை கட்டும் முடிவில் எந்த மாற்றமும் கிடையாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்தார்.

பெங்களூருவில் இன்று நடைபெற்ற முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா அதன்பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: நடுவர்மன்ற தீர்ப்பு படி, காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய 192 டிஎம்சி நீரை அளித்துவிட்டு எஞ்சிய நீரை பயன்படுத்த கர்நாடகாவுக்கு எந்த தடையும் கிடையாது. இதில் தமிழகம் தலையிட முடியாது.
மேக்கேதாட்டு பகுதியில் இரு அணைகளை கட்டி குடிநீர் மற்றும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது அநாவசியமானது. கர்நாடகா புதிய அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது.
கர்நாடகா புதிய அணை கட்டுவதால் தமிழகத்துக்கு செல்லும் நீரின் அளவு குறைந்துவிடாது. எனவே தமிழகம் எதிர்த்தாலும் அணை கட்டும் முடிவில் கர்நாடகா பின்வாங்காது. விவசாயிகள் கலங்க வேண்டாம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார். மேலும் தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கையும் கர்நாடகா சந்திக்கும் என்றும் சித்தராமையா கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications