வரதட்சணைக் கொடுமை சட்டம் கேடயம்தான் ஆயுதமல்ல- மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்!
டெல்லி: டெல்லியில் அமைந்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வரதட்சணைக் கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதைத் தவிர்க்க கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது.
ஒரு பெண் அவளுடைய கணவராலோ அல்லது அவருடைய குடும்பத்தினராலோ சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டு வரை ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க இ.பி.கோ. 498 ஏ பிரிவு வகை செய்கிறது.
ஆனால், சமீபகாலமாக வரதட்சணை கொடுமை புகார்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இந்த சட்டம், மனைவிமார்களால் கேடயமாக பயன்படுத்தப்படாமல், ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு:
எனவே, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கவனமுடன் பின்பற்ற வேண்டும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
தன்னிச்சையாக கைது:
அதன்படி, இ.பி.கோ. 498 ஏ பிரிவின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை தன்னிச்சையாக கைது செய்யக்கூடாது என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.
கைதுக்கான காரணங்கள்:
கைது செய்வதற்கான அவசியம் உள்ளதாக போலீஸ் அதிகாரிகளே திருப்தி அடையும் வகையில் காரணங்கள் இருந்தால்தான் கைது செய்ய வேண்டும். அந்த காரணங்கள் அடங்கிய பட்டியலை, போலீஸ் அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு நோட்டீஸ்:
வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், குற்றம் சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராவதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். அந்த கால அவகாசத்தை மாவட்ட போலீஸ் அதிகாரி நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் குறிப்பிட வேண்டும்.
நீதிபதியின் உத்தரவு:
மேலும், இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, போலீஸ் அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்து, மேற்கூறிய காரணங்கள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே, அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட வேண்டும்.
துறை ரீதியான நடவடிக்கை:
ஆனால், இந்த காரணங்கள் இல்லாமல் காவலில் வைக்க உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதி மீது ஹைகோர்ட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications