"டிடிவி தினகரனா? அப்படின்னா யாருன்னே தெரியாது... புரோக்கர் சுகேஷ் 'ஒரேபோடு'
தனக்கு லஞ்சம் கொடுத்த டிடிவி தினகரன் யாரென்றே தெரியாது என்று புரோக்கர் சுகேஷ் புதிய குண்டை வீசியுள்ளார்.
டெல்லி : இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர பேரம் பேசப்பட்டு முன்பணம் வாங்கப்பட்டதாக டெல்லி போலீசாரிடம் சிக்கிய இடைத்தரகர் சுகேஷ் சந்தர் தமக்கு டிடிவி தினகரன் யாரென்றே தெரியாது என கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ஏப்ரல் 17-ந் தேதி ஒரு 1.30 கோடியுடன் டெல்லி குற்றப்பிரிவு போலீஸிடம் சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, இரட்டை இலைச் சின்னத்தை மீட்க டி.டி.வி.தினகரன் தரப்பு லஞ்சப் பணம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்தனர். டெல்லி போலீஸார் சம்மன் அளித்ததையடுத்து டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடம் டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

26 மணி நேரம்
புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரனிடம் மட்டும் இதுவரை 26 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதலில் சுகேஷ் சந்தர் யாரென்றே தெரியாது என்று கூறிய டிடிவி பின்னர் போலீசார் ஆதாரங்களைக் காட்டியதும் சுகேஷை தாம் சந்தித்தை ஒப்புக் கொண்டார்.

8 நாள் விசாரணை
சுகேஷை அறிமுகம் செய்து வைத்ததாக வழக்கறிஞர் ஒருவரின் பெயரும் அடிபடுவதால் அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுகேஷ் சந்தரிடம் 8 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று போலீஸ்காவலை நீட்டிப்பதற்காக நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.

யாருன்னே தெரியாது
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவலுடன் அழைத்து வரப்பட்ட சுகேஷிடம் பேட்டி கண்ட நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனல், டிடிவி தினகரனுக்கு உங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்ப அதற்கு எனக்கு தினகரன் யாரென்றே தெரியாது என்று ஒரே போடு போட்டிருக்கிறார்.

பழைய வழக்கு
மேலும் தம் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுகேஷ் பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உரையாடல் பதிவை டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பிரவு போலீசார் தாக்கல் செய்துள்ள நேரத்தில் சுகேஷ் அப்பாவி ரியாக்ஷன் கொடுத்துள்ளதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications