வெறும் 16 வயசுதான்.. நிர்வாணமாக்கி.. தலைமுடியை வெட்டி.. முகத்தில் கரி பூசி.. ராஜஸ்தான் அராஜகம்!
ஆடு திருடியதாக 16 வயது சிறுவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய கொடுமை நடந்துள்ளது
ஜெய்ப்பூர்: வெறும் 16 வயசுதான்.. முழு நிர்வாணமாக்கி.. தலைமுடியை வெட்டி.. அடித்து துன்புறுத்தி.. முகத்தில் கரியும் பூசியுள்ளனர் கொடூரர்கள்.. இந்த அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ளது பால்கர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த ஒருவரது ஆடு காணாமல் போய்விட்டது.

ஆட்டை யார் திருடினார்கள் என்று கண்டுபிடிக்க தொடங்கினார்.. கடைசியில் 16 வயது சிறுவன்தான் ஆட்டை திருடியிருப்பதாக கருதி 3 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்துள்ளனர்.
சிறுவனின் டிரஸ்களை மொத்தமாக களைந்து நிர்வாணமாக்கி உள்ளனர்.. முகத்தில் கரியை எடுத்து பூசியுள்ளனர்.. பிறகு தலைமுடியையும் வெட்டி எடுத்துள்ளனர்... இதெல்லாம் போதாது என்று அந்த ஆடு திருடியதற்காக 1 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
கொடுமைகள் ஒவ்வொன்றையும் தாங்க முடியாமல் சிறுவன் அழ ஆரம்பித்துவிட்டான்.. உடம்பெல்லாம் ரத்த காயங்கள்.. வீட்டுக்கு வந்து நடந்ததையெல்லாம் சொல்லி அழுதான்.. ரத்தம் வழிவதை பார்த்த பெற்றோர் பதறியடித்தபடி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. தற்போது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
நடந்த சம்பவம் குறித்த அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று இளைஞரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்... தங்கள் மகன் அப்படி ஒரு காரியத்தை செய்யவே இல்லை, அந்த ஆடு யார் திருடியது என்றே தங்களுக்கு தெரியாது என்று சிறுவனின் பெற்றோர் கதறி அழுதபடி போலீசில் சொன்னார்கள். தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு ஆடு திருடியதற்காக நிர்வாணப்படுத்தி, தலைமுடியை வெட்டி, கரியை பூசி, அடித்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications