12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாய்மாமன் உள்ளிட்ட 2 உறவினர்கள்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் 12 வயது சிறுமி தாய்மாமன் உள்பட உறவினர்கள் இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது தாய்மாமாவின் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவரை அவரின் தாய்மாமா பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி உத்தர பிரதேச மாநிலம் இடாவாவில் உள்ள ஷங்கர் என்ற உறவினரின் வீட்டிற்கு சென்று தங்கினார்.

ஏற்கனவே தாய்மாமா செய்த காரியத்தால் அதிர்ச்சியில் இருந்த சிறுமியை அந்த உறவினரும் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் பயந்து போன சிறுமி அங்கிருந்தும் கிளம்பி ஜெய்பூர் வந்தார்.
எங்கு போவது என்று தெரியாமல் இருந்த அவர் ஜெய்பூரில் உள்ள சிசு கிரா என்ற காப்பகத்தில் சேர்ந்தார். அங்கு அவர் மூன்று மாதங்களாக இருந்தும் தனக்கு நேர்ந்தது பற்றி யாரிடமும் கூறவில்லை. அதன் பிறகு தான் அங்குள்ள பெண்கள் கமிட்டியினரிடம் அவர் தன்னை உறவினர்கள் 2 பேர் பலாத்காரம் செய்ததை தெரிவித்தார்.
இதையடுத்து சிசு கிராவில் உள்ளவர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications