3 நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
டெல்லி: மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, இன்று தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். தலைநகர் டோக்கியோவில் அவர் இரு நாடுகளின் முக்கிய வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து ஜப்பான் மன்னர் அகிடோவை (82) பிரதமர் மோடி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இந்தியா-ஜப்பான் இடையே நீண்டகால உறவு, ஆசியாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர்.

பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயையும் மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சிவில் அணுசக்தி, விவசாயம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதைத்தொடர்ந்து இன்று கோபே சென்ற மோடி பிரதமர் ஷின்சோ அபேயுடன் புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். மேலும், அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே உரையாற்றினார். இந்நிலையில், தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட அவர் டெல்லி வந்தடைந்தார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications